போலீஸ் டைரி..: திருவள்ளூர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி..: திருவள்ளூர்

Added : ஆக 30, 2021
Share
சூதாடிய எட்டு பேர் கைதுதிருவாலங்காடு: ராமாபுரம் ஏரியில், அரக்கோணத்தை சேர்ந்த சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, சோதனையில் ஈடுபட்ட போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட அரக்கோணத்தை சேர்ந்த எட்டு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஆறு இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல்

சூதாடிய எட்டு பேர் கைது

திருவாலங்காடு: ராமாபுரம் ஏரியில், அரக்கோணத்தை சேர்ந்த சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சோதனையில் ஈடுபட்ட போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட அரக்கோணத்தை சேர்ந்த எட்டு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஆறு இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

புகையிலை பொருள் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரத்தில், அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலை பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவலின்படி, , திருவள்ளூர் டவுன் போலீசார், சோதனை நடத்தினர்.

வண்டிக்கார தெரு அருகில் இருந்த, பெட்டிக் கடை ஒன்றில், சோதனை நடத்தியதில், 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, கடை உரிமையாளர், அஸ்லாம், 31, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

இளம்பெண் மாயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த, சிறுவானார்கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர், மணி மகள் அனிதா, 23. இவர், கடந்த 28ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் பின் வீடு திரும்பவில்லை.உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து, அவரது தாயார் முருகம்மாள் அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X