கடற்கரை - செங்கல்பட்டு ரயில்கள் பாதி வழியில் ரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடற்கரை - செங்கல்பட்டு ரயில்கள் பாதி வழியில் ரத்து

Added : ஆக 30, 2021
Share
சென்னை:காட்டாங்கொளத்துார் - சிங்கப்பெருமாள் கோவில் இடையே, ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், தாம்பரம் - செங்கல்பட்டு மின்சார ரயில்கள், பாதி வழியில் ரத்து செய்யப்பட்டுள்ளன.சென்னை கடற்கரையில் இருந்து, செங்கல்பட்டுக்கு, காலை 10:10 மணி, 10:56 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் இன்றும், செப்., 1ம் தேதியும், காட்டாங்கொளத்துார் - செங்கல்பட்டு இடையே ரத்து

சென்னை:காட்டாங்கொளத்துார் - சிங்கப்பெருமாள் கோவில் இடையே, ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், தாம்பரம் - செங்கல்பட்டு மின்சார ரயில்கள், பாதி வழியில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரையில் இருந்து, செங்கல்பட்டுக்கு, காலை 10:10 மணி, 10:56 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் இன்றும், செப்., 1ம் தேதியும், காட்டாங்கொளத்துார் - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன.செங்கல்பட்டில் இருந்து, சென்னை கடற்கரை நிலையத்துக்கு காலை 11:30 மணி, நண்பகல் 12:20 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், செங்கல்பட்டு - காட்டாங்கொளத்துார் இடையே, இன்றும் செப்., 1ம் தேதியும், ரத்து செய்யப்பட்டுள்ளன

திருமால்பூரில் இருந்து, சென்னை கடற்கரைக்கு இன்றும் செப்., 1ம் தேதியும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த ரயிலுக்கு பதிலாக, இன்றும், செப்., 1ம் தேதியும், திருமால்பூரில் இருந்து, சென்னை கடற்கரை நிலையத்துக்கு, பகல், 12:00 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X