எல்லையோர சோதனைச்சாவடியில் ஸ்தம்பிக்கும் சரக்கு வாகனங்கள்| Dinamalar

எல்லையோர சோதனைச்சாவடியில் ஸ்தம்பிக்கும் சரக்கு வாகனங்கள்

Added : ஆக 30, 2021
Share
கும்மிடிப்பூண்டி:சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் பகுதியில், ஆந்திர எல்லையை ஒட்டி, தமிழக அரசின் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி இயங்கி வருகிறது.அந்த சோதனைச்சாவடியில், தமிழகத்தில் இருந்து, ஆந்திரா நோக்கி செல்லும் வாகனங்களுக்காக, ஆறு தடங்களும், ஆந்திராவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு, 10 தடங்களும் உள்ளன.ஒவ்வொரு வாகனங்களாக,
 எல்லையோர சோதனைச்சாவடியில் ஸ்தம்பிக்கும் சரக்கு வாகனங்கள்

கும்மிடிப்பூண்டி:சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் பகுதியில், ஆந்திர எல்லையை ஒட்டி, தமிழக அரசின் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி இயங்கி வருகிறது.

அந்த சோதனைச்சாவடியில், தமிழகத்தில் இருந்து, ஆந்திரா நோக்கி செல்லும் வாகனங்களுக்காக, ஆறு தடங்களும், ஆந்திராவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு, 10 தடங்களும் உள்ளன.ஒவ்வொரு வாகனங்களாக, போக்குவரத்து துறையினர், ஆவண தணிக்கை செய்து வருகின்றனர்.போக்குவரத்து துறையில், ஆள் பற்றாக்குறை காரணமாக, அனைத்து தடங்களும் அடைத்து, ஒரே ஒரு தடம் வழியாக, கனரக வாகனங்களை அனுமதித்து, ஆவணங்களை சரி பார்த்து வருகின்றனர்.

இதனால், சோதனைச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் எற்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் சரக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால், குறித்த நேரத்தில் சரக்கை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. ஆனால், கார், ஆட்டோ, பைக்குகள் செல்வதற்கு தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள், போதிய ஆட்களை நியமித்து, மேலும், மூன்று தடங்களை திறந்து வைத்து ஆவண தணிக்கை செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'விரைவில் போதிய ஊழியர்கள் நியமித்து, காத்திருப்பு இன்றி வாகனங்கள் கடந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X