சின்னாளபட்டி : திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளனர்.
கடந்தாண்டு மார்ச் முதல் ஊரடங்கால் நிறுத்தப்பட்ட பொது போக்குவரத்து, அடுத்த சில மாதங்களில் படிப்படியாக அதிகரித்தது. இருப்பினும் கிராமப்புறங்களில் பல வழித்தடங்களில் அரசு டவுன் பஸ் சேவை கிடைக்கவில்லை. மகளிருக்கான இலவச சலுகை அளித்தும், பல கிராமங்களில் பஸ் வசதியின்றி மக்கள் பரிதவிக்கின்றனர். வேறு வழியின்றி தனியார் வாகனங்கள், ஆட்டோக்களில் பயணிக்கின்றனர்.செப்.1 முதல் பள்ளி, கல்லுாரிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கிராமப்புறங்களில் நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ் சேவை மீண்டும் துவங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் உள்ளனர்.
மாவட்டத்தை பொறுத்தவரை மாணவர்களின் போக்குவரத்துக்கு ஏற்ப கிராமப்புற டவுன் பஸ் சேவை போதுமானதாக இல்லை. தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சின்னாளபட்டி சமூக ஆர்வலர் ஜெயராமன் கூறுகையில்,' 'ஜாதிக்கவுண்டன்பட்டி செல்ல வேண்டிய அரசு டவுன் பஸ், பாலம் பணி முடிந்தும் சின்னாளபட்டி வரை மட்டுமே இயங்குகிறது. சுங்க கட்டண பிரச்னையால் கொடைரோடு தடத்தில் சில 'டிரிப்'களை நிறுத்தியுள்ளனர். செம்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம் உட்பட பல கிராமங்களுக்கான அரசு பஸ் சேவை துவங்கவில்லை'',என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE