விநாயகர் சதுர்த்தி கொண்டாட கோயில்களுக்கு பாதுகாப்பு பா.ஜ., வலியுறுத்தல்| Dinamalar

விநாயகர் சதுர்த்தி கொண்டாட கோயில்களுக்கு பாதுகாப்பு பா.ஜ., வலியுறுத்தல்

Added : ஆக 30, 2021
மதுரை : தீவிரவாத அமைப்பு அச்சுறுத்தல் இருப்பதால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஏதுவாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தியது.தென் மண்டல ஐ.ஜி., அன்புவிடம் பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஜெய்சிங் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர். அவர்கள் கூறியதாவது: செப்., 10 விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும்

மதுரை : தீவிரவாத அமைப்பு அச்சுறுத்தல் இருப்பதால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஏதுவாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தியது.தென் மண்டல ஐ.ஜி., அன்புவிடம் பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஜெய்சிங் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.



அவர்கள் கூறியதாவது: செப்., 10 விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் முக்குறுணி விநாயகர், பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர், தஞ்சாவூர் வாதாபி கணபதி உள்ளிட்ட முக்கிய கோயில்களில் இவ்விழா சிறப்பாக நடக்கும். தாலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளியிடப்படுவதுடன், ஐ.எஸ்.ஐ.எஸ்.கே அமைப்பினர் பயங்கரவாதிகளை அனுப்பி சதி செய்ய திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே கோயில்களில் உச்சகட்ட பாதுகாப்பு வழங்க உத்தரவிட வலியுறுத்தப்பட்டது, என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X