சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் - அரசு பஸ் மோதல்: பலி தியாகதுருகம் அருகே பரிதாபம்

Added : ஆக 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தியாகதுருகம் : தியாகதுருகம் புறவழிச்சாலையில் கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஊட்டிக்கு சுற்றுலா சென்று திரும்பிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் எபினேசர் இமான் 28; இவர் தனது குடும்பத்தினர் 5 பேருடன் காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்று நேற்று தாம்பரம் திரும்பினார்.சென்னையிலிருந்து 35 பயணிகளுடன் சேலம் நோக்கி அரசு பஸ் சென்று
 கார் - அரசு பஸ் மோதல்: பலி  தியாகதுருகம் அருகே பரிதாபம்


தியாகதுருகம் : தியாகதுருகம் புறவழிச்சாலையில் கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ஊட்டிக்கு சுற்றுலா சென்று திரும்பிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் எபினேசர் இமான் 28; இவர் தனது குடும்பத்தினர் 5 பேருடன் காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்று நேற்று தாம்பரம் திரும்பினார்.சென்னையிலிருந்து 35 பயணிகளுடன் சேலம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் அழகுராஜன் 40; ஓட்டினார்.இரவு 8:00 மணியளவில் எபினேசர் இமான் வந்த கார் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பிரிதிவிமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே புறவழிச்சாலையில் நுழைய முயன்றபோது அரசு பஸ் நேருக்கு நேர் அசுர வேகத்தில் மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த எபினேசர் இமான் இவரது தம்பி இமானுவேல் 23; ரபேக்கா 20; மோனிகா 22; 13 வயது சிறுவன் 55 வயது பெண் ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.பஸ்சில் டிரைவர் அழகுராஜன் உட்பட பயணிகள் 4 பேர் காயமடைந்தனர். பொதுமக்கள் வாக்குவாதம்விபத்து நடந்ததும் அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டனர். புறவழிச்சாலை ஒரு வழிச்சாலையாக இருப்பதால் தொடர்ந்து இங்கு விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என போலீசாரிடம் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
04-செப்-202120:41:48 IST Report Abuse
NicoleThomson என்னங்க தியாகதுருகம் அருகில் இரண்டாவது மோசமான விபத்து
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X