விமோசனம்!

Added : ஆக 30, 2021
Share
Advertisement
திருத்தணி:திருத்தணியில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அறிவித்த புதிய நவீன பஸ் நிலைய பணிகள், நிதியில்லாமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின், 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததால், இம்முறையாவது ஒப்பந்ததாரர்கள் 'டெண்டர்' எடுத்து பணிகள் துவங்குவரா என, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்

திருத்தணி:திருத்தணியில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அறிவித்த புதிய நவீன பஸ் நிலைய பணிகள், நிதியில்லாமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின், 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததால், இம்முறையாவது ஒப்பந்ததாரர்கள் 'டெண்டர்' எடுத்து பணிகள் துவங்குவரா என, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி பின்புறத்தில், 0.74 ஏக்கர் பரப்பில், அண்ணா பஸ் நிலையம், 1983ம் ஆண்டு ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு விடப்பட்டது. குறுகிய பஸ் நிலையத்திற்கு அதிகளவில் பஸ்கள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதையடுத்து, 2019ல், மாவட்ட நிர்வாகம் திருத்தணியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு, திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை அருகில், 4.60 ஏக்கர் ஒதுக்கீடு செய்து, நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. பின், நகராட்சி நிர்வாகம் அங்கிருந்த மலைக் குன்றுகளை, 29 லட்சம் ரூபாய் செலவில் அகற்றியது.

தொடர்ந்து, அதே ஆண்டு, ஜூலை 24ம் தேதி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம், புதிய நவீன பஸ் நிலையம், 20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கியது.ஆனால் அரசிடம் நிதியில்லாததால் பொதுப்பணித் துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் பஸ் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என, அரசாணை வெளியிட்டது. ஆனால், தனியார் பங்களிப்பு என்பதால் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு யாரும் முன்வராததால், மூன்று முறை 'டெண்டர்' ரத்து செய்யப்பட்டது.

இதனால், புதிய நவீன பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந் நிலையில், பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின், 'திருத்தணி புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு, 20 கோடி ரூபாய் அரசே நிதி ஒதுக்கீடு செய்யும். விரைவில் பஸ் நிலையம் ஏற்படுத்தப்படும்' என, அறிவித்தார். முதல்வர் அறிவிப்பால் இனியாவது திருத்தணி புதிய பஸ் நிலையம் அமைக்கப்படுமா, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்குமா என, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பஸ் நிலையத்தில் என்னென்ன வசதிகள்

* மொத்தம், 37 பஸ்கள் நிறுத்தலாம்l பஸ் நிலைய வளாகத்தில், 24 கடைகள்l ஒரு உணவகம்

* ஒரே நேரத்தில், 200 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் பார்க்கிங் வசதி

* ஆண், பெண் என தனித்தனி நவீன கட்டண கழிப்பறைl பயணியர் பொருட்கள் வைக்கும் அறை

* வங்கி ஏ.டி.எம்., மையம்l முன்பதிவு மையம்

* ஒரு வணிக வளாகம்l ஆண், பெண் என தனித்தனி இலவச கழிப்பிடம்l கண்காணிப்பு 'கேமரா' பொருத்திய புறக்காவல் மையம்l தாய்மார்கள் பாலுாட்டும் அறைl பஸ் பயணிகள், ஊழியர்கள் தனித்தனி ஒய்வறைl ஒரு குளிர்சாதன ஒய்வறை

* சுத்திகரிப்பட்ட குடிநீர் மையம்l முதலுதவி அறைl பாதுகாவலர் அறைl தீயணைப்பு வீரர்கள் தங்கும் அறை

* மின்விளக்குகள் பராமரிக்கும் ஊழியர்கள் அறை

விரைவில் பணிகள் துவக்கம்

திருத்தணி நகராட்சியில், புதிய நவீன பஸ் நிலையம் கட்டுவதற்கு, முதல்வர், 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால், நிலுவையில் இருந்த பணிகள் துரிதபடுத்தப்படும். அரசாணை வந்தவுடன், அதற்கான நடைமுறை பணிகள் மேற்கொண்டு ஆறு மாதத்திற்குள் டெண்டர் விட்டு, பஸ் நிலைய கட்டுமான பணிகள் துவங்கப்படும்.

ப்ரீத்தி,நகராட்சி ஆணையர், திருத்தணி

பணிகள் தாமதம் ஏன்

தனியார் பங்களிப்புடன் அமையும் அதிநவீன பஸ் நிலையம் கட்டினால் 'டெண்டர்' எடுத்த ஒப்பந்ததாரர், 10 மாதங்களுக்குள் பணிகள் முடித்து பயன்பாட்டிற்குவிட வேண்டும். அவர், சொந்த செலவில் கட்டடப் பணிகள் மேற்கொண்டால், 22 ஆண்டு களுக்கு மட்டும், பஸ் நிலையத்தில் வருவாய் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன்பின், நகராட்சி நிர்வாகத்திடம் பஸ் நிலையம் ஒப்படைக்க வேண்டும்.

அதுவரை பஸ் நிலைய பராமரிப்பு பணிகளும், ஒப்பந்ததாரர் மேற்கொள்ள வேண்டும். பஸ் நிலைய பணிகளுக்கு செய்த செலவு, 22 ஆண்டுக்குள் கிடைக்காது என்பதால் மூன்று முறை டெண்டர் விட்டும் எடுக்க யாரும் வரவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X