பொது செய்தி

இந்தியா

10 நிமிடங்களில் மளிகை பொருள் 'ஆன்லைன்' நிறுவனத்திற்கு கண்டனம்

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 30, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
புதுடில்லி-'வாடிக்கையாளர்களின் வீடு தேடி 10 நிமிடங்களில் மளிகை பொருட்கள் வந்து சேரும்' என, 'ஆன்லைன்' வாயிலாக மளிகை பொருட்கள் வழங்கும் சேவையை அளித்து வரும் 'குரோபர்ஸ்' நிறுவனம் உறுதி அளித்தது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.'ஸ்விக்கி, ஸொமாட்டோ' உணவகங்களில் இருந்து உணவு வாங்கி, அதை வீடுகளுக்கு வந்து தரும் சேவையை 'ஸ்விக்கி, ஸொமாட்டோ' நிறுவனங்கள்

புதுடில்லி-'வாடிக்கையாளர்களின் வீடு தேடி 10 நிமிடங்களில் மளிகை பொருட்கள் வந்து சேரும்' என, 'ஆன்லைன்' வாயிலாக மளிகை பொருட்கள் வழங்கும் சேவையை அளித்து வரும் 'குரோபர்ஸ்' நிறுவனம் உறுதி அளித்தது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.



latest tamil news


'ஸ்விக்கி, ஸொமாட்டோ' உணவகங்களில் இருந்து உணவு வாங்கி, அதை வீடுகளுக்கு வந்து தரும் சேவையை 'ஸ்விக்கி, ஸொமாட்டோ' நிறுவனங்கள் அளிக்கின்றன. இதுபோல, அருகில் உள்ள கடைகளில் இருந்து மளிகை பொருட்களை வாங்கித் தரும் சேவையை குரோபர்ஸ் என்ற நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தை அல்பிந்தர் தின்ட்சா என்பவர் துவக்கினார்.

குரோபர்ஸ் நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர் ஒருவர், 'ஆர்டர்' செய்து 13 நிமிடங்களில் மளிகை பொருட்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்ததாக தன் சமூக வலைதளப் பதிவில் சமீபத்தில் தெரிவித்தார்.இந்த பதிவிற்கு குரோபர்ஸ் நிறுவன அல்பிந்தர் பதில் அளித்தார். அதில் 'உங்கள் மளிகை பொருட்கள் 3 நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளன. 10 நிமிடங்களில் பொருட்களை வழங்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்' என தெரிவித்தார்.

இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துஉள்ளது. 'இது போன்ற வாக்குறுதிகள், பொருட்களை எடுத்து வந்து தரும் ஊழியர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை' என, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


latest tamil news


வேதனை

இதை சற்றும் எதிர்பாராத அல்பிந்தர், கண்டனங்களுக்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:விரைவாக பொருட்களை வழங்குவோம் என உறுதி அளிப்பதால், ஊழியர்களுக்கு ஆபத்து என அர்த்தமல்ல. நாங்கள் திட்டமிட்டு பணியாற்றுகிறோம். எங்களுக்கு நிறைய கடைகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளன. அவை வாடிக்கையாளர்களின் வீடுகளில் இருந்து 2 கி.மீ., தொலைவில் அமைந்துஉள்ளன.

எனவே, பெரும்பாலான பொருட்களை இரண்டரை நிமிடங்களில் பெற்று, அதை உடனடியாக சென்று சேர்க்க 10 நிமிடங்கள் போதும். இது போன்ற புதிய முயற்சிகளை ஊக்கப்படுத்தாவிட்டாலும், எதிர்மறை விமர்சனங்கள் செய்யாமல் இருப்பது நலம். கடுமையான விமர்சனங்களால் மிகவும் வேதனை அடைந்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankara Narayanan - Chennai,இந்தியா
01-செப்-202114:59:06 IST Report Abuse
Sankara Narayanan குரோபர்ஸ் ஒரு நல்ல நிறுவனம். ஆன்லைன் வியாபாரம் அமோகமாக நடை பெற்று வருகின்ற நிலையில் மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள ஒரு உத்திதான் துரிதமாக பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது என்பது .இதில் ஏதும் தவறில்லை.
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
31-ஆக-202114:06:03 IST Report Abuse
pradeesh parthasarathy நிறுவனத்திற்கு விளம்பரத்தை உருவாக்கி கொடுக்கும் செய்தி ....
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
31-ஆக-202106:40:29 IST Report Abuse
meenakshisundaram இது குறுக்கு வழியில் ,மிக குறைவான காலத்திலேயே சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள தொழில் புரிவோர் அனைத்தினரின் மனோபாவத்தை குறிக்கிறது .சமூகத்தில் பல தொழில் கள் (வக்கீல் மருத்துவர் அரசு அதிகாரிங்க அரசியல் தலைவர்கள் எல்லோரும் இதில் அடங்குவார்கள் .இதை சைக்காலஜி எல்லாவற்றிலும் உபயோகப்படுத்தி வேலை செய்கிறார்கள் என்பது உண்மை .தமிழக மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு இது பெரு எடுத்துக்காட்டு
Rate this:
Sankara Narayanan - Chennai,இந்தியா
01-செப்-202115:04:31 IST Report Abuse
Sankara Narayananஆன்லைன் வியாபாரம் நாட்டை சீரழித்து விட்டது என ஒரு அன்பர் குறிப்பிட்டு இருந்தார்.இதற்கு காரணம் கொரோநா .மக்களால் வெளியே சென்று வாங்க முடியாத நிலை ஏற்பட்டதினால் வந்த விளைவு இது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X