சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
அரசு பஸ் ஊழியர்கள் மீது மோசடி வழக்குமதுரை: அப்பன் திருப்பதி ரம்யா 24. இவருக்கும்,உறவினருக்கும் அரசு வேலை வாங்கித்தருவதாககூறி புதுார் அரசு பஸ் டெப்போ கண்டக்டர் ரூபராஜ், டிரைவர் பெத்தி ஆகியோர் ரூ.6 லட்சம் பெற்று மோசடி செய்தனர். திருப்பாலை எஸ்.ஐ., சண்முகநாதன் விசாரித்து வருகிறார்.காரில் 280 கிலோ கஞ்சா கடத்தல்மதுரை: செல்லுார் மேலத்தோப்பு பகுதியில் போலீசார் வாகன சோதனையில்

அரசு பஸ் ஊழியர்கள் மீது மோசடி வழக்கு

மதுரை: அப்பன் திருப்பதி ரம்யா 24. இவருக்கும்,உறவினருக்கும் அரசு வேலை வாங்கித்தருவதாககூறி புதுார் அரசு பஸ் டெப்போ கண்டக்டர் ரூபராஜ், டிரைவர் பெத்தி ஆகியோர் ரூ.6 லட்சம் பெற்று மோசடி செய்தனர். திருப்பாலை எஸ்.ஐ., சண்முகநாதன் விசாரித்து வருகிறார்.

காரில் 280 கிலோ கஞ்சா கடத்தல்
மதுரை: செல்லுார் மேலத்தோப்பு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காமராஜர்புரம் சரத்குமார் உட்பட மூவர் வந்த காரை சோதனையிட்ட போது 280 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. சரத்குமார் 29, கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய வில்லாபுரம் ஹாஜிஅலி, மேலஅனுப்பானடி விஜயகுமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

ரூ.50 ஆயிரம் திருட்டு
திருமங்கலம் : மைக்குடி அருகே நெடுங்குளம் பிரிவுஓய்வு பெற்ற மின் ஊழியர் ராமர் 60. வீட்டில் அனைவரும் வெளியூர் சென்றநிலையில் ராமர் நேற்று முன்தினம் மாலை கடைக்கு சென்று திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 50 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.திருடியவர்கள் கைது

அலங்காநல்லுார்: காந்திகிராமம் புதுகாலனி பழனிச்சாமி 62. இவரது ஆட்டு குட்டியை திருடிய தேவசேரி இந்திரா நகர் செல்வம் மகன் ஆனந்தராஜை 21, போலீசார் கைது செய்து ஆட்டுக்குட்டியை மீட்டனர்.* சமயநல்லுார்: பாத்திமா நகர் விக்னேஷ் 24. ஆக.,27 வீட்டின் முன் நிறுத்திய இவரது டூவீலர் திருடு போனது. இதுதொடர்பாக எஸ்.ஐ., ராஜ்குமார் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பிரகாஷை 24, கைது செய்து டூவீலரை மீட்டார்.* சோழவந்தான்: மன்னாடிமங்கலம் நல்லமுத்து 63. இவரது தோட்டத்து கிணற்றில் மின்மோட்டார் திருடிய அதே பகுதி ராஜாவை 41, போலீசார் கைது செய்தனர். தப்பிய ஜெயராமனை தேடி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் கைது
சோழவந்தான்: காடுபட்டி மலையடிவாரத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ.,பாலமுருகன் தலைமையிலான போலீசார் சென்று போட்டி நடத்திய காடுபட்டி சண்முகவேல் 45, தர்மராஜ் 18, மதுரை பெத்தானியாபுரம் சதீஷ்குமாரை 24, கைது செய்து 16 டூவீலர்கள் மற்றும் 4 சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
வீட்டில் திருட்டு
வாடிப்பட்டி: சமயநல்லுார் அருகே சிறுவாலை முருகன் மனைவி தாயம்மாள் 47. விவசாய கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் 3 பவுன் நகை, ரூ.5 ஆயிரம், வெண்கல குத்துவிளக்கு, அலைபேசி திருடப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.

சிறுவனிடம் நகை பறித்தவர் கைது
வாடிப்பட்டி: நாகமலை புதுக்கோட்டை அடுத்த தாராபட்டி லட்சுமி மகன் அபிஷேக் 15. நேற்று முன்தினம் இரவு வீட்டில் துரங்கிய போது சிறுவனிடம் இரண்டரை பவுன் நகையை திருடிய அதே பகுதி பெருமாள் மகன் லோகநாதனை 21, போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X