சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் மஞ்சள் நீராட்டு விழா

Added : ஆக 30, 2021
Share
Advertisement
எறையாமங்கலம்:எறையாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில், தனியார் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா வைரஸ் பரவலால் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தி வருகிறது. வரும் செப். 1ம் தேதி முதல், 9, 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.இந்நிலையில்,
 அரசு பள்ளியில் மஞ்சள் நீராட்டு விழா

எறையாமங்கலம்:எறையாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில், தனியார் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தி வருகிறது. வரும் செப். 1ம் தேதி முதல், 9, 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், எறையாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், அப் பகுதியைச் சேர்ந்த தனியார் ஒருவரின் வீட்டு மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது.

கொரோனா மூன்றாவது அலை குறித்து, சுகாதாரத் துறை எச்சரித்து வரும் வேளையில், எவ்வித விழிப்புணர்வும் இல்லாமல், அரசு பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சி நடந்தது சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

எனவே மாவட்ட நிர்வாகம் அரசு உயர்நிலைப் பள்ளியில் விழா நடத்தியது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பள்ளி தலைமையாசரியர் ஜெயந்தி கூறுகையில், ''என்னிடம் அனுமதி வாங்கி தான் சுப நிகழ்ச்சி நடப்பதாகவும், பள்ளி விடுமுறை என்பதால் விழா நடத்த அனுமதித்ததாகவும்,'' கூறினார்.

இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியகோடி கூறுகையில், ''அரசு பள்ளிகளில், தனியார் விழா நடத்த அனுமதி கிடையாது. தற்போது கொரோன பரவல் சூழலில் இவ்வாறு நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது தவறு. சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X