சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணா கால்வாயில் சிறுவன் மீட்பு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
செவ்வாப்பேட்டை:வேப்பம்பட்டு அருகே, கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த சிறுவன் உடல் மீட்கப்பட்டது.வேப்பம்பட்டு, விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் முரளிதரன் மகன் பிரனேஷ், 16. இவர், நேற்று முன்தினம் இரவு 8:45 மணியளவில், நண்பர் வேல்சரவணன் என்பவருடன், அப்பகுதி யில் உள்ள கிருஷ்ணா கால்வாய் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டார்.அப்போது, கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்தார். செவ்வாப்பேட்டை

செவ்வாப்பேட்டை:வேப்பம்பட்டு அருகே, கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த சிறுவன் உடல் மீட்கப்பட்டது.

வேப்பம்பட்டு, விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் முரளிதரன் மகன் பிரனேஷ், 16. இவர், நேற்று முன்தினம் இரவு 8:45 மணியளவில், நண்பர் வேல்சரவணன் என்பவருடன், அப்பகுதி யில் உள்ள கிருஷ்ணா கால்வாய் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டார்.அப்போது, கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்தார். செவ்வாப்பேட்டை போலீசார் மற்றும் திருவூர் தீயணைப்பு வீரர்கள் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை, பிரனேஷ் உடலை, தொட்டிகலை பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, இவரது தந்தை முரளிதரன் அளித்த புகாரையடுத்து, செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X