பொது செய்தி

தமிழ்நாடு

அங்கீகாரமில்லாத 74 நர்சரி பள்ளிகளுக்கு நோட்டீஸ் 16 பள்ளிகள் மூடல்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 74 நர்சரி, பிரைமரி, பிளே ஸ்கூல்களுக்கு கல்வித்துறை நோட்டீஸ் அளித்துள்ளது. மதுரை கிழக்கு ஒன்றியத்தில் 16 பள்ளிகளைமூடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் நர்சரி, பிரைமரி பள்ளிகள் செயல்படுவதாகவும், பல பள்ளிகள் மூன்று ஆண்டுகளாக அங்கீகாரத்தை புதுப்பிக்கவில்லை எனத்தெரிந்தது. பல பள்ளிகளில்

மதுரை : மதுரையில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 74 நர்சரி, பிரைமரி, பிளே ஸ்கூல்களுக்கு கல்வித்துறை நோட்டீஸ் அளித்துள்ளது.

மதுரை கிழக்கு ஒன்றியத்தில் 16 பள்ளிகளைமூடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் நர்சரி, பிரைமரி பள்ளிகள் செயல்படுவதாகவும், பல பள்ளிகள் மூன்று ஆண்டுகளாக அங்கீகாரத்தை புதுப்பிக்கவில்லை எனத்தெரிந்தது. பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடப்பதாகவும் தகவல் வெளியாகியது.பி.இ.ஓ.,க்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் குழு ஆய்வு செய்தது. 84 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாதது தெரியவந்தது.

அரசியல் அழுத்தம் இருந்தும் ஒத்தக்கடை உள்ளிட்ட கிழக்கு ஒன்றியத்தில் 16 பள்ளிகளை மூடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.சி.இ.ஓ., சுவாமிநாதன் கூறுகையில், “மாவட்டத்தில் 38 நர்சரி மற்றும் பிளே ஸ்கூல் என 84 பள்ளிகள் அங்கீகாரம் பெறவில்லை. இவற்றில் 10 பள்ளிகள் தற்போது விண்ணப்பித்துள்ளன. அவை தவிர மீதமுள்ள 74 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது” என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X