பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு 'ஷாக்' கொடுக்கும் அதிகாரிகள் 3 ஆண்டுகளாக இலவச மின் இணைப்பு இல்லை

Added : ஆக 30, 2021
Share
Advertisement
மேலுார் : மேலுார், அட்டப்பட்டி பகுதிகளில் டாப்செட்கோ திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைத்த சிறு, குறு விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளாக இலவச மின் இணைப்பு கொடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இப்பகுதி விவசாயிகள் பிற்படுத்தபட்டோர் நல வாரியத்தில் டாப்செட்கோ திட்டத்தின் கீழ் இலவச மின் இணைப்புக்கு மனு கொடுத்தனர். பிற்படுத்தப்பட்டோர் துறை

மேலுார் : மேலுார், அட்டப்பட்டி பகுதிகளில் டாப்செட்கோ திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைத்த சிறு, குறு விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளாக இலவச மின் இணைப்பு கொடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

இப்பகுதி விவசாயிகள் பிற்படுத்தபட்டோர் நல வாரியத்தில் டாப்செட்கோ திட்டத்தின் கீழ் இலவச மின் இணைப்புக்கு மனு கொடுத்தனர். பிற்படுத்தப்பட்டோர் துறை பரிந்துரையில் வங்கி கடன் ரூ.ஒரு லட்சம் வழங்கப்பட்டது. விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைத்தும் இலவச மின் இணைப்பு வழங்கவில்லை.அட்டப்பட்டி உடையான்:

ஆழ்துளை கிணறு அமைத்தும் அரசு தர வேண்டிய மானியம் ரூ.50 ஆயிரம் வழங்கவில்லை. வங்கி கடனுக்கு 3 ஆண்டுகளாக வட்டி கட்டிவருகிறோம். இலவச மின் இணைப்பு கொடுக்காததால் விவசாயம் செய்யாமல் நிலம் தரிசாக கிடப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜஸ்டின்: மின் இணைப்பு கொடுக்க உயரதிகாரிகளுக்கு பரித்துரை செய்துள்ளோம். அனுமதி கிடைத்ததும் கொடுக்கப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X