பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்...: காஞ்சிபுரம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
8 துணை பி.டி.ஓ.,க்கள் மாற்றம்வாலாஜாபாத்: உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், ஊரக பகுதி அலுவலர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். நிர்வாக காரணங்களுக்காகவும் மாற்றப்படுவது வழக்கம்.இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், எட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, இடமாறுதல் அளிக்கப்பட்டு உள்ளது. வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் என பல
 சில வரி செய்திகள்...: காஞ்சிபுரம்

8 துணை பி.டி.ஓ.,க்கள் மாற்றம்
வாலாஜாபாத்: உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், ஊரக பகுதி அலுவலர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். நிர்வாக காரணங்களுக்காகவும் மாற்றப்படுவது வழக்கம்.இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், எட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, இடமாறுதல் அளிக்கப்பட்டு உள்ளது. வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் என பல நிலைகளில் உள்ள அலுவலர்களை இடமாற்றி, ஊரக வளர்ச்சி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அம்மன் கோவில் விழா நிறைவு

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பத்தில் வேண்டவராசியம்மன், கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், ஏழு வாரங்கள் ஆடித் திருவிழா நடத்தப்படும். இந்தாண்டு விழா ஞாயிற்றுகிழமை தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கொரோனா தொற்று காரணாக பால்குட விழா, சொற்பொழிவு, சுவாமி வீதிஉலா தவிர்க்கப்பட்டது. நேற்றுடன் இவ்விழா நிறைவடைந்தது. வேண்டவராசியம்மன் அம்மன், விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ரூ.6.75 லட்சம் வருவாய்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில், சமீபத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு மேளாக்கள் நடந்தன. அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட மேளாவில், 42 புதிய பாலிசிகள் பிடிக்கப்பட்டு, 2.79 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டது.அதேபோல், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட மேளாவில், 178 புதிய பாலிசிகள் பிடிக்கப்பட்டு, 3.95 லட்சம் ரூபாய் வருவாய் என, மொத்தம் 6.75 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

நெல்லிக்குன்றத்தில் கிருத்திகைஆர்.கே.பேட்டை: அத்திமாஞ்சேரிபேட்டையில் உள்ளது வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி மலைக்கோவில்.நெல்லிக்குன்றம் என அழைக்கப்படும் இந்த மலைக்கோவிலில், கிருத்திகை உற்சவம் நடத்தப்படுகிறது. காலையில் அபிஷேகம், ஆராதனையும், மாலையில் சுவாமி மலைக்கோவில் உள்புறப்பாடு எழுந்தருளுவதும் வழக்கம்.நேற்று காலையில் அபிஷேகமும், மாலையில் சுவாமி வீதியுலாவும் நடந்தது. மலைக் கோவிலில் திரளான பக்தர்கள் மூலவரை தரிசித்தனர்.

ஊழியர்கள் இடமாற்றம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், 'ப்ளான் அப்ரூவல்' எனப்படும் கட்டட வரைபட அனுமதி வழங்கும் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள், பல ஆண்டுகளாக பணியாற்றுவதாகவும், வரைபட அனுமதிக்கு பல ஆயிரம் ரூபாய் கமிஷன் கேட்பதாகவும், தொடர் புகார் எழுந்தது.

இது குறித்து, கடந்த 23ம் தேதி, நம் நாளிதழில், விரிவான செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், கட்டட வரைபட அனுமதி பிரிவில் பணியாற்றும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ய, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X