சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐவருக்கு குண்டாஸ்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் எருமைக்காரத் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் 42. மாநகராட்சி அருகே பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். கடந்த ஆக.7 ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 11 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் பொன்மாந்துரை புதுப்பட்டி சுந்தரபாண்டியன் 39, கீர்த்தி என்ற சத்தியமூர்த்தி 29, அன்பழகன் 22 ஆகியோரை எஸ்.பி., ஸ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில், குண்டர்

திண்டுக்கல் : திண்டுக்கல் எருமைக்காரத் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் 42. மாநகராட்சி அருகே பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். கடந்த ஆக.7 ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் 11 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் பொன்மாந்துரை புதுப்பட்டி சுந்தரபாண்டியன் 39, கீர்த்தி என்ற சத்தியமூர்த்தி 29, அன்பழகன் 22 ஆகியோரை எஸ்.பி., ஸ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில், குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.இதே போல், மானாமதுரை ஆவாரங்காடு தங்கராஜ் 37, திருப்பாச்சேத்தி அஜீத்குமார் 23 ஆகியோர் மே 9 ம் தேதி திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் முத்துராஜா நகரில் ஒரு வீட்டில் பூட்டை உடைத்து 26 பவுன் நகை, ரூ.50 லட்சத்தை திருடியதாக போலீசார் கைது செய்தனர். இவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X