சம்பவம் செய்தி

தமிழ்நாடு

9 ஆண்டுகளுக்கு முன்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
வடமதுரை : வடமதுரை அருகே 9 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட அரசு கள்ளர் துவக்கப் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.சிங்காரக்கோட்டை ஊராட்சி எஸ்.குரும்பபட்டியில் செயல்பட்டு வந்த அரசு கள்ளர் துவக்கப் பள்ளி போதிய மாணவர்கள் இல்லாமல் கடந்த 2012 ல் மூடப்பட்டது. இதனால் இப்பகுதி குழந்தைகள் சிங்காரக்கோட்டை, வேலாயுதம்பாளையம், மொட்டணம்பட்டி, வடமதுரை என பல ஊர்களுக்கும் சென்று

வடமதுரை : வடமதுரை அருகே 9 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட அரசு கள்ளர் துவக்கப் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
சிங்காரக்கோட்டை ஊராட்சி எஸ்.குரும்பபட்டியில் செயல்பட்டு வந்த அரசு கள்ளர் துவக்கப் பள்ளி போதிய மாணவர்கள் இல்லாமல் கடந்த 2012 ல் மூடப்பட்டது. இதனால் இப்பகுதி குழந்தைகள் சிங்காரக்கோட்டை, வேலாயுதம்பாளையம், மொட்டணம்பட்டி, வடமதுரை என பல ஊர்களுக்கும் சென்று படிக்கும் நிலையில் இருந்தது. கிராமத்தினர் எடுத்த முயற்சியால் நடப்பு கல்வியாண்டு முதல் இங்கு மீண்டும் துவக்கப் பள்ளி செயல்பட துவங்கியுள்ளது.

இங்கு கூடுதலாக கட்டப்பட்ட கான்கிரீட் கட்டடம் மட்டுமே நல்ல நிலையில் உள்ளது. ஓடுகளான மேற்கூரை கொண்ட வகுப்பறை கூரை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதற்குள் செல்வோர் மீது ஓடுகள் விழும் ஆபத்து உள்ளது. இதே வளாகத்தில் உள்ள கிணற்றிற்கு அமைக்கப்பட்டிருந்த இரும்பு கட்டமைப்பு சிதைந்து கிணற்றிற்குள் விழுந்து விட்டது. பாதுகாப்பற்ற கிணறும் குழந்தைகளுக்கு அச்சுறுத்தலான விஷயம். வகுப்புகள் துவங்கும் முன் போதிய வசதிகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஏற்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X