செங்கல்பட்டு:செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், விரைவு ரயிலில் இருந்து 30 கிலோ கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிலிருந்து சர்க்கார் விரைவு ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு நேற்று காலை 8:00 மணிக்கு வந்தது. பயணியர் அனைவரும் இறங்கி சென்றதும், செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர்கள் ராமதாஸ், ராஜசேகர், ரத்னவேல் மற்றும் போலீசார், ரயில் பெட்டிகளில் வழக்கமான சோதனைகளில் ஈடுபட்டனர்.
அப்போது, 'பி1' மற்றும் 'எஸ்8' பெட்டிகளில், நான்கு 'டிராவல் பேக்'குகள் கேட்பாரற்று கிடந்தன. இவற்றை காவல் நிலையம் எடுத்து சென்று போலீசார் பிரித்து பார்த்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.இவற்றை, காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒப்படைத்தனர். கைப்பற்றப்பட்ட 30 கிலோ கஞ்சாவின் மதிப்பு 5 லட்சம் ரூபாய் எனவும், இவற்றை எடுத்து வந்த நபர்களை தேடி வருவதாகவும் ரயில்வே போலீசார் கூறினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement