பொது செய்தி

தமிழ்நாடு

பெருங்கோழி ஏரிக்கரையில் 3,000 பனை விதைகள் நடவு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
உத்திரமேரூர்: உத்திரமேரூர் பருத்திகொல்லை கிராமத்தைச் சேர்ந்த 'பருக்கோ பிரண்ட்ஸ்' தன்னார்வ அமைப்பினர், பெருங்கோழி ஏரிக்கரையில், 3,000 பனை விதைகளை நேற்று நடவு செய்தனர்.உத்திரமேரூர் பருத்திக்கொல்லை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ - மாணவியர், இளைஞர்கள் ஒன்றிணைந்து, 'பருக்கோ ப்ரண்ட்ஸ், இணைவோம் இயற்கையை காக்க' என்ற தன்னார்வ
 பெருங்கோழி ஏரிக்கரையில்  3,000 பனை விதைகள் நடவு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பருத்திகொல்லை கிராமத்தைச் சேர்ந்த 'பருக்கோ பிரண்ட்ஸ்' தன்னார்வ அமைப்பினர், பெருங்கோழி ஏரிக்கரையில், 3,000 பனை விதைகளை நேற்று நடவு செய்தனர்.

உத்திரமேரூர் பருத்திக்கொல்லை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ - மாணவியர், இளைஞர்கள் ஒன்றிணைந்து, 'பருக்கோ ப்ரண்ட்ஸ், இணைவோம் இயற்கையை காக்க' என்ற தன்னார்வ அமைப்பை, 2013ல் துவக்கினர்.

இக்குழுவினர் உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள கிராம ஏரிக்கரைகளில் மண் அரிப்பை தடுக்கும் வகையில், ஆண்டுதோறும், வடகிழக்கு பருவ மழை முன், பனை விதைகளை நடவு செய்து வருகின்றனர்.அதன்படி, பெருங்கோழி ஏரிக்கரையில் நேற்று, 3,000 பனை விதைகள் நடவு செய்தனர். இப்பணியை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் ஆதன் கொற்றவை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் துரைபாபு செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X