பொது செய்தி

தமிழ்நாடு

அடிக்கடி விபத்து நடப்பதை தடுக்க கீழம்பியில் மேம்பால பணி விறுவிறு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை கீழம்பியில், அடிக்கடி விபத்து ஏற்படும் இடத்தில், மேம்பாலம் கட்டுமான பணி நடப்பதால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி அருகில், சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. வேலுார், ஆந்திரா, கர்நாடகா, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளுக்கு இச்சாலையே பிரதானம்.இந்த சாலை நான்கு
 அடிக்கடி விபத்து நடப்பதை தடுக்க கீழம்பியில் மேம்பால பணி விறுவிறு

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை கீழம்பியில், அடிக்கடி விபத்து ஏற்படும் இடத்தில், மேம்பாலம் கட்டுமான பணி நடப்பதால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி அருகில், சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. வேலுார், ஆந்திரா, கர்நாடகா, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளுக்கு இச்சாலையே பிரதானம்.இந்த சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப் பட்டபோது கீழம்பி பகுதியில், நெடுஞ்சாலைத் துறை மேம்பாலம் கட்டவில்லை.

முறையான சிக்னல் வசதியும் இல்லாததால், அந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடந்தது. விபத்தை தடுக்க கீழம்பி சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்; பல முறை போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஆறுவழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. எதிர் காலத்தில் விபத்தை தவிர்க்கும் வகையில், இந்த இடத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:காஞ்சிபுரத்திற்கு கனரக வாகனங்கள் தவிர, பல கிராமங்களில் இருந்து இரு சக்கர வாகனங்களில் ஏராளமானோர், கீழம்பி வழியாக செல்கின்றனர்.

ஆபத்தான முறையில் சாலையை கடந்து செல்ல வேண்டியிருந்தது. இதனால் இந்த இடத்தில் அதிகளவில் விபத்து நடந்தது.தற்போது மேம்பாலம் கட்டுவதால் இனி விபத்தை தவிர்க்கலாம். சென்னை - பெங்களூரு செல்ல வேண்டிய வாகனங்கள் மேம்பாலம் வழியாக செல்லும். காஞ்சிபுரம் செல்லும் வாகனங்கள் பாலத்தின் கீழ் செல்வதால் விபத்து தடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X