பொது செய்தி

தமிழ்நாடு

8 ஏரிகளுக்கு தென்பெண்ணையாற்று நீரை கொண்டு வர முயற்சி விழுப்புரத்தான் வாய்க்கால் புனரமைப்பில் விவசாயிகள் தீவிரம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சிக்கு நீர் ஆதாரமாக உள்ள ஏரிகளுக்கு தென்பெண்ணை ஆற்று தண்ணீரைக் கொண்டு வர வரத்து வாய்க்காலை விவசாயிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து புனரமைப்பு பணியை துவங்கியுள்ளனர். இதனால், 18 ஆண்டு களுக்கு பிறகு விழுப்புரத்திற்கு பெண்ணை ஆற்று தண்ணீர் வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.விழுப்புரம் நகராட்சிக்கு நீர் ஆதாரமாக விழுப்புரம் பெரிய ஏரி, புது
  8 ஏரிகளுக்கு தென்பெண்ணையாற்று நீரை கொண்டு வர முயற்சி  விழுப்புரத்தான் வாய்க்கால் புனரமைப்பில் விவசாயிகள் தீவிரம்

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சிக்கு நீர் ஆதாரமாக உள்ள ஏரிகளுக்கு தென்பெண்ணை ஆற்று தண்ணீரைக் கொண்டு வர வரத்து வாய்க்காலை விவசாயிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து புனரமைப்பு பணியை துவங்கியுள்ளனர்.

இதனால், 18 ஆண்டு களுக்கு பிறகு விழுப்புரத்திற்கு பெண்ணை ஆற்று தண்ணீர் வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.விழுப்புரம் நகராட்சிக்கு நீர் ஆதாரமாக விழுப்புரம் பெரிய ஏரி, புது ஏரி, விராட்டிக்குப்பம் ஏரி, சித்தேரி, தட்டாம்பாளையம் ஏரி, மருதுார் ஏரி, அய்யங்கோவில்பட்டு ஏரி, வழுதரெட்டி ஏரி ஆகியவை உள்ளன.இதில், சித்தேரி மற்றும் தட்டாம்பாளையம் ஏரிகள் பஞ்சாயத்து கட்டுப்பாட்டிலும், மற்ற ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளன. இந்த ஏரிகளில் விழுப்புரம் பெரிய ஏரி, புது ஏரி, சித்தேரி, தட்டாம்பாளையம் ஏரி ஆகியவற்றிற்கு நீர்தேக்கத்திற்கான வழித்தடம் இல்லாததால் நீர்தேக்கம் கேள்விக்குறியாக உள்ளது.

இதனால், விழுப்புரம் நகரில் நிலத்தடி நீர்மட்டம் 80 அடி முதல் 100 அடி ஆழத்திற்கு சென்று விட்டது. மேலும், தண்ணீரில் சுண்ணாம்பு மற்றும் உப்பின் அளவு அதிகமாக இருப்பதால், குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை.இதனால், விழுப்புரம் ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து வரும் வரத்து வாய்க்காலை மீட்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முடிவு செய்தனர்.அதாவது, தெளிமேடு தென்பெண்ணை ஆற்றில் இருந்து உருவாகும் விழுப்புரத்தான் வாய்க்கால் மூலம், 22 கி.மீ., துாரம் விழுப்புரம் ஏரிக்கு தண்ணீர் வருவதற்கு வழித்தடம் உள்ளது.

இந்த வழித்தடம் புதர் மண்டியும், பராமரிப்பு இல்லாததாலும் தண்ணீர் வரத்து கேள்விக்குறியானது.மேலும், கடந்த 2003ம் ஆண்டு துவங்கப்பட்ட புறவழிச்சாலையால், விழுப்புரத்தான் வாய்க்கால் விராட்டிக்குப்பம் கூட்ரோடு பகுதியில் மூடப்பட்டது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் இருந்து விழுப்புரம் ஏரிக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் இல்லாமல் போனது.இதையடுத்து, விழுப்புரத்தான் வாய்க்காலை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த 2016 மற்றும் 2019ம் ஆண்டுகளில் சொந்த செலவில் புனரமைத்தனர்.இதன் பயனாக, தெளிமேட்டில் இருந்து 16 கி.மீ., துாரத்தில் உள்ள நன்னாடு கிராம எல்லை வரை தென்பெண்ணை ஆற்று தண்ணீர் நன்னாடு, ஆலாத்துார், விராட்டிக்குப்பம் ஏரிகளுக்கு வந்து, முழு கொள்ளளவை எட்டியது.நன்னாட்டில் இருந்து மீதம் 6 கி.மீ., துாரம் உள்ள விழுப்புரம் பெரிய ஏரி, புது ஏரிகளுக்கு வரத்து வாய்க்கால் புனரமைப்புப் பணி மேற்கொள்ள கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதன்படி, கலெக்டர் மோகன், விழுப்புரத்தான் வாய்க்காலை ஆய்வு செய்து, வாய்க்கால் வசதி ஏற்படுத்திக்கொடுக்குமாறு தேசிய நெடுஞ்சாலைத் துறையினருக்கு, உத்தரவிட்டார். தேசிய நெடுஞ்சாலை துறையினர் தங்களுக்கு சொந்தமான இடத்தில் வரத்து வாய்க்கால் அமைத்துக் கொள்ள அனுமதி அளித்தனர்.அதனைத் தொடர்ந்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிதி திரட்டி, விழுப்புரத்தான் வாய்க்கால் புனரமைப்பு பணிகளை துவங்கியுள்ளனர்.இந்த புனரமைப்புப் பணி முடிந்தால் 337.37 ஏக்கர் பரப்பளவிலான விழுப்புரம் ஏரிகளுக்கு தென்பெண்ணை ஆற்று தண்ணீர் வரத்து ஏற்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் உயரும். வரும் காலங்களில் விழுப்புரம் நகரில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X