பொது செய்தி

தமிழ்நாடு

வழக்குகளில் சிக்கிய வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
வானூர் : ஆரோவில் போலீஸ் நிலையத்தில், பல்வேறு வழக்குகளில் சிக்கி, நீண்ட நாட்களாக நின்ற வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.ஆரோவில் போலீஸ் நிலையத்தில் குற்றங்கள், விபத்துகள் மற்றும் பல்வேறு வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட நுாற்றுக்கணக்கான வாகனங்கள் குவிந்துள்ளன. பல ஆண்டுகளாக நிற்கும் வாகனங்கள் மக்கி மண்ணாகி வருகிறது.கோர்ட் வழக்கு முடிந்த

வானூர் : ஆரோவில் போலீஸ் நிலையத்தில், பல்வேறு வழக்குகளில் சிக்கி, நீண்ட நாட்களாக நின்ற வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

ஆரோவில் போலீஸ் நிலையத்தில் குற்றங்கள், விபத்துகள் மற்றும் பல்வேறு வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட நுாற்றுக்கணக்கான வாகனங்கள் குவிந்துள்ளன. பல ஆண்டுகளாக நிற்கும் வாகனங்கள் மக்கி மண்ணாகி வருகிறது.கோர்ட் வழக்கு முடிந்த பிறகும், முறையான ஆவணங்களைக் காண்பித்து, தங்களின் வாகனங்களை அதன் உரிமையாளர்கள் எடுத்து செல்ல முன் வருவதில்லை.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை, உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களைக் காண்பித்து, எடுத்துச் செல்லலாம் என இன்ஸ்பெக்டர் அன்பரசு தெரிவித்திருந்தார்.அதன் படி நேற்று முதல் அதன் உரிமையாளர்கள், தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து, வருவதால் அவர்களிடம் வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X