பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரத்தில் விழிப்புணர்வு மராத்தான்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
விழுப்புரம் : தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, விழுப்புரத்தில், விழிப்புணர்வு சிறிய மராத்தான் நடந்தது.பொதுமக்களிடையே விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த விழிப்புணர்வு சிறிய மராத்தானை டி.ஆர்.ஓ., ராஜசேகரன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஹாக்கி, கால்பந்து, தடகளம், கூடைப்பந்து, கபடி, கைப்பந்து வீரர்,
 விழுப்புரத்தில் விழிப்புணர்வு மராத்தான்

விழுப்புரம் : தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, விழுப்புரத்தில், விழிப்புணர்வு சிறிய மராத்தான் நடந்தது.பொதுமக்களிடையே விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த விழிப்புணர்வு சிறிய மராத்தானை டி.ஆர்.ஓ., ராஜசேகரன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.

மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஹாக்கி, கால்பந்து, தடகளம், கூடைப்பந்து, கபடி, கைப்பந்து வீரர், வீராங்கனைகள் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு வரை சென்று, கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு திரும்பி நிறைவு செய்தனர்.டி.எஸ்.பி., பழனிசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன், உலக தடகள போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பரத் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X