போலீஸ் டைரி நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
ரத்தினபுரி, சம்பத் தெருவை சேர்ந்தவர் குமார்; இவரது மனைவி தனது மொபைல்போன், ஒரு பவுன் நகை, 130 கிராம் வெள்ளி கொலுசு ஆகியவற்றை, டிவி மீது வைத்து விட்டு துாங்கினார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, நகை உள்ளிட்டவை திருடு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.பைக் திருடன் கைதுசெல்வபுரம் ரோடு, செட்டி வீதியை

ரத்தினபுரி, சம்பத் தெருவை சேர்ந்தவர் குமார்; இவரது மனைவி தனது மொபைல்போன், ஒரு பவுன் நகை, 130 கிராம் வெள்ளி கொலுசு ஆகியவற்றை, டிவி மீது வைத்து விட்டு துாங்கினார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, நகை உள்ளிட்டவை திருடு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பைக் திருடன் கைது
செல்வபுரம் ரோடு, செட்டி வீதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு, 46. இவர் உக்கடம் பைபாஸ் ரோட்டில் கடந்த வாரம் பைக்கை நிறுத்தியிருந்தார். அப்போது பைக் திருடுபோனது; செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து, பைக்கை திருடிய பேரூரை சேர்ந்த பிரகாஷ், 31 என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பைக் மீட்கப்பட்டது.
பான்மசாலா விற்றவர்கள் கைது
ரேஸ்கோர்ஸ், சாய்பாபாகாலனி, ராமநாதபுரம், போத்தனுார், சிங்காநல்லுார், சரவணம்பட்டி போலீசார் நேற்று முன்தினம், தங்கள் பகுதிகளிலுள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்களை விற்பனை செய்த முருகன், 38, அலெக்சாண்டர், 53, பாபு, 32, பூபனேஷ், 29, சாஜித், 29, ஆரோக்யசாமி, 42 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, ஹான்ஸ் உள்ளிட்ட பான்மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X