பொது செய்தி

தமிழ்நாடு

வரத்து குறைந்தும் விலை 'மணக்கவில்லை!' பூ விலை மாற்றத்தில் அதிசயம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கோவை:மழையால் பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்துள்ளது. ஆனால், விலை குறைந்துள்ளது.கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள, பூ மார்க்கெட்டுக்கு, மேட்டுப்பாளையம், காரமடை, அன்னுார், சத்தியமங்கலம், நிலக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, விற்பனைக்காக பூக்கள் கொண்டு வரப்படுகின்றன.கடந்த வாரம் ஓணம், வரலட்சுமி நோன்பு உள்ளிட்ட

கோவை:மழையால் பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்துள்ளது. ஆனால், விலை குறைந்துள்ளது.கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள, பூ மார்க்கெட்டுக்கு, மேட்டுப்பாளையம், காரமடை, அன்னுார், சத்தியமங்கலம், நிலக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, விற்பனைக்காக பூக்கள் கொண்டு வரப்படுகின்றன.கடந்த வாரம் ஓணம், வரலட்சுமி நோன்பு உள்ளிட்ட பண்டிகையின்போது, பூக்களின் விலை அதிகமாக இருந்தது. பண்டிகை முடிந்து சில நாட்களே ஆன நிலையில், நேற்று பூக்களின் விலை சரிந்துள்ளது.கடந்த வாரம், ஒரு கிலோ 1,400 ரூபாய்க்கு விற்பனையான மல்லி, நேற்று 320 ரூபாய்க்கும், ரூ.600 விற்பனையான முல்லை, ரூ.200க்கும், ரூ.600க்கும் விற்பனையான, ஜாதி, ரூ.200க்கும், ரூ.200க்கு விற்கப்பட்ட, சம்பங்கி, ரூ.30க் கும் விற்பனையானது.கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்க தலைவர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் ஹக்கீம், செயலாளர் அன்சாரி கூறுகையில், 'வரத்து குறையும் போது, விலை அதிகரிப்பது இயல்பு. ஆனால், கடந்த சில நாட்களாக, பூ உற்பத்தியாகும் இடங்களில், மழை பெய்து வருவதால், உற்பத்தி பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்துள்ளது. போதிய விலை கிடைக்கவில்லை. சில நாட்களுக்கு முன் தொடர்ச்சியாக பண்டிகைகள் இருந்ததால், விற்பனை சூடுபிடித்தது; விலையும் கிடைத்தது. பண்டிகைகள் முடிந்ததால், விற்பனை மந்தமாக உள்ளது. பூக்களின் வரத்து குறைந்த போதும், விலை கிடைக்கவில்லை.இதற்கு, மக்களிடம் தற்போது நிலவும் பொருளாதார சூழலும் ஒரு முக்கிய காரணம். இதனால், வந்த விலைக்கு பூக்களை விற்று வருகிறோம். மீண்டும் பண்டிகை வரும்போது, விலை உயரும் என, எதிர்பார்க்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X