பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரத்தில் 106 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் சோதனையில், 106 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மீன் மார்க்கெட் மற்றும் நகராட்சியில் உள்ள மீன் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சுகந்தன், மீன் வளத்துறை கூடுதல் இயக்குனர் ஜனார்த்தனன் தலைமையிலான அலுவலர்கள்
 விழுப்புரத்தில் 106 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்

விழுப்புரம் : விழுப்புரத்தில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் சோதனையில், 106 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மீன் மார்க்கெட் மற்றும் நகராட்சியில் உள்ள மீன் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சுகந்தன், மீன் வளத்துறை கூடுதல் இயக்குனர் ஜனார்த்தனன் தலைமையிலான அலுவலர்கள் நேற்று அதிகாலை சோதனையில் ஈடுபட்டனர்.

அதில், ரசாயனம் எதுவும் கலக்கப்பட்டுள்ளதா எனவும், கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர். அப்போது, அழுகிய நிலையில் கெட்டுப் போன 106 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர்.உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின் ராஜரத்தினம், இளங்கோவன், கதிரவன், பிரசாத், கொளஞ்சி, மோகன், அன்புமணி, மீன்வளத்துறை ஆய்வாளர் சந்திரமணி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X