பொது செய்தி

தமிழ்நாடு

17 வாரத்துக்கு பின் கூடுகிறது மாட்டுச்சந்தை!

Added : ஆக 30, 2021
Share
Advertisement
திருப்பூர்:தென்னம்பாளையத்தில், மாட்டுச்சந்தை நடந்து வந்தது. மாநகரில் இட நெருக்கடி காரணமாக இடம் மாற்ற வேண்டும் என விவசாயிகள், வியாபாரிகள் வற்புறுத்தி வந்தனர்.ஊரடங்கு, சமூக இடைவெளி கடைபிடிப்பதில் சிக்கல், அதிகளவில் கூட்டம் கூடுவதால், கடந்த மே 9 முதல் மாட்டுச்சந்தை நடத்த தடைவிதிக்கப்பட்டது. தளர்வுக்கு பின் மாவட்டத்தின் பிற பகுதியில் சந்தை நடத்த அனுமதிக்கப்பட்ட

திருப்பூர்:தென்னம்பாளையத்தில், மாட்டுச்சந்தை நடந்து வந்தது. மாநகரில் இட நெருக்கடி காரணமாக இடம் மாற்ற வேண்டும் என விவசாயிகள், வியாபாரிகள் வற்புறுத்தி வந்தனர்.ஊரடங்கு, சமூக இடைவெளி கடைபிடிப்பதில் சிக்கல், அதிகளவில் கூட்டம் கூடுவதால், கடந்த மே 9 முதல் மாட்டுச்சந்தை நடத்த தடைவிதிக்கப்பட்டது. தளர்வுக்கு பின் மாவட்டத்தின் பிற பகுதியில் சந்தை நடத்த அனுமதிக்கப்பட்ட போதிலும், தென்னம்பாளையம் மாட்டுச்சந்தைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இந்நிலையில், கோவில்வழி அடுத்த அமராவதிபாளையத்தில், இன்று முதல் மாட்டுச்சந்தை நடத்த கலெக்டர் வினீத், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் ஒப்புதல் அளித்துள்ளனர்.சந்தை நடக்கவுள்ள ஐந்து ஏக்கர் இடம் மண் கொட்டி சமப்படுத்தப்பட்டுள்ளது. 1.5 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கும் சந்தை, 17 வாரங்களாக நடக்காத நிலையில், இன்று முதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பூர் கால்நடை வியாபாரிகள் சங்க தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், 'நான்கு இடங்களில் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு, இறுதியில், அமராவதிபாளையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர், வியாபாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் தடையின்றி தொடர்ந்து சந்தை நடைபெறும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X