பொது செய்தி

தமிழ்நாடு

மாதம் 10 லட்சம் கிலோ பிராய்லர் கறிக் கோழி உற்பத்தி  ஏற்றுமதி வாய்ப்புகளை உருாக்க வேண்டும்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
தேனி : தேனி மாவட்டத்தில் நிலவும் சீதோஷ்ண நிலையால் மாதம் 10 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. தேனி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் இதமான சீதோஷ்ண நிலை, சுத்தமான குடிநீர் கிடைப்பதால் பல ஆண்டுகளாக பிராய்லர் கோழி வளர்ப்பு தொழில் நடக்கிறது. விவசாயத்தின் உப தொழிலாக கருதி 300 கோழிப் பண்ணைகள் செயல்பட்டு


தேனி : தேனி மாவட்டத்தில் நிலவும் சீதோஷ்ண நிலையால் மாதம் 10 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

தேனி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் இதமான சீதோஷ்ண நிலை, சுத்தமான குடிநீர் கிடைப்பதால் பல ஆண்டுகளாக பிராய்லர் கோழி வளர்ப்பு தொழில் நடக்கிறது. விவசாயத்தின் உப தொழிலாக கருதி 300 கோழிப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு பண்ணைக்கு 10 முதல் 15 பேர் வேலை நேரிடையாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு பெறுகின்றனர். வளர்ப்பு கூலியாக கிலோவிற்கு ரூ.6.50 வழங்கப்படும்.எடை அதிகரிக்கும்:

தேனி மாவட்டத்தில் வளரும் கோழி குஞ்சுகள் குறிப்பிட்ட நாட்களில் நல்ல வளர்ச்சி எட்டுகிறது. குஞ்சு வழங்கி 40 நாட்களில் 2.200 எடை வளர்ச்சி ஏற்படும். இத் தொழிலில் முக்கிய பங்கு வகிக்கும் நாமக்கல், பல்லடம் பகுதியை விட இங்கு குறைந்த நாட்களில் அதிக எடை கிடைக்கிறது. இதற்கு காரணம் மற்ற மாவட்டங்களில் வெயில் நேரங்களில் கோழிகள் உணவு எடுப்பது இல்லை. ஆனால் இங்கு 24 மணிநேரமும் உணவு எடுப்பதால் நல்ல எடை கிடைக்கிறது. நோய் தாக்கம் குறைவு.

எனவே, இத்தொழில் நாளுக்கு நாள் வளர்ச்சியை எட்டுகிறது. மானியம் வேண்டும்:ஐந்து லட்சம் குஞ்சுகள் வளர்த்து மாதம் 10 லட்சம் கிலோ கறிக் கோழி உற்பத்தியாகிறது. இவை 70 சதவீதம் கேரளாவிற்கு அனுப்படுகிறது. இங்கிருந்து பல்லடம் சென்று வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. தொழிலுக்கு நல்ல எதிர்காலம் உள்ளதால் பண்ணையாளர்களுக்கு அரசு மானிய கடன், ஏற்றுமதி தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். வளர்ந்து வரும் தொழில்களுக்கு பசுமை தீர்பாயம், மாசுகட்டுப்பாட்டு வாரியம் விதிக்கும் புதிய கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளித்து விவசாயம் தொழில் ஆக வகைப்படுத்த வேண்டும் என பண்ணையாளர்கள் கோரியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X