பொது செய்தி

தமிழ்நாடு

'சிங்கப் பெண்'களுக்கு கவுரவம்!

Added : ஆக 30, 2021
Share
Advertisement
திருப்பூர்:தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, ரோட்டரி கிளப் ஆப் பாரதி சார்பில், மாவட்டஅளவில் விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த மகளிரை கவுரவிக்கும் விதமாக, பெண்கள் பங்கேற்ற வாகன பேரணி திருப்பூரில் நேற்று நடந்தது.வீரபாண்டி பிரிவில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அம்பிகா பேரணியை துவக்கி வைத்தார். பல்லடம் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக புஷ்பா தியேட்டர் சென்ற வாகன
 'சிங்கப் பெண்'களுக்கு கவுரவம்!

திருப்பூர்:தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, ரோட்டரி கிளப் ஆப் பாரதி சார்பில், மாவட்டஅளவில் விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த மகளிரை கவுரவிக்கும் விதமாக, பெண்கள் பங்கேற்ற வாகன பேரணி திருப்பூரில் நேற்று நடந்தது.வீரபாண்டி பிரிவில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அம்பிகா பேரணியை துவக்கி வைத்தார். பல்லடம் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக புஷ்பா தியேட்டர் சென்ற வாகன பேரணி, கலெக்டர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.பேரணியில் பிரியங்கா (நீச்சல்), வர்ஷா (கராத்தே), காவியா (யோகா), ஜெயஸ்ரீ (ரைபிள்), ஹரிணி (குத்துச்சண்டை), வைஷ்ணவி (சைக்கிளிங்) உள்ளிட்ட விளையாட்டு வீராங்கனைகள், பயிற்சியாளர், பெண்கள் என, 50 பேர் பங்கேற்றனர்.ரோட்டரி கிளப் ஆப் பாரதி தலைவர் ராஜலட்சுமி, செயலாளர் சரண்யா உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். ரோட்டரி துணை கவர்னர் செந்தில்குமார், ஆலோசகர் பிரேம்ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X