பொது செய்தி

தமிழ்நாடு

போதை... குற்றங்கள்... கலங்குகிறது கரைப்புதுார்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
பல்லடம்;பல்லடம் அடுத்த கரைப்புதுார் ஊராட்சியில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்; குடியிருப்புகள், பனியன் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் உள்ளிட்டவை நெருக்கமாக அமைந்துள்ளன.வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். போதைப்பொருட்கள் பயன்பாடு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் இப்பகுதியில் அதிகரித்து வருவதாக, பொதுமக்கள்

பல்லடம்;பல்லடம் அடுத்த கரைப்புதுார் ஊராட்சியில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்; குடியிருப்புகள், பனியன் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் உள்ளிட்டவை நெருக்கமாக அமைந்துள்ளன.வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். போதைப்பொருட்கள் பயன்பாடு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் இப்பகுதியில் அதிகரித்து வருவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.பொதுமக்கள் கூறுகையில், 'வடமாநில மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் இங்கு வசிக்கின்றனர். தொழிலாளர் பலருக்கு, முறையான ஆவணங்கள் கிடையாது.தொழிலாளர் போர்வையில் சமூக விரோதிகளும் ஊடுருவியுள்ளனர். அவ்வப்போது, வழிப்பறியில் ஈடுபடுவதும், போதை பொருட்கள் பயன்படுத்துவதையும் இவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இரவு நேரங்களில் பெண்கள் அச்சத்துடன் சென்று வரும் நிலை உள்ளது.குறிப்பாக, சின்னக்கரை பகுதியில் அதிக அளவு குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன. இளைஞர்கள் பலர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, வாழ்க்கையை இழந்து வருகின்றனர். போதைப்பொருட்கள் பதுக்கலை கண்டறிவதுடன், சமூக விரோதிகளை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X