பொது செய்தி

தமிழ்நாடு

அனுப்பர்பாளையத்தில் பாத்திரங்கள் தேக்கம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
அனுப்பர்பாளையம்:அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், செட்டிபாளையம், அங்கேரிபாளையம், ஆத்துப்பாளையம், காளம்பாளையம் பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. நாளொன்றுக்கு, எவர்சில்வர், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பாத்திரங்களில் 25 சதவீதம், கேரளாவுக்கு விற்பனைக்காக

அனுப்பர்பாளையம்:அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், செட்டிபாளையம், அங்கேரிபாளையம், ஆத்துப்பாளையம், காளம்பாளையம் பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. நாளொன்றுக்கு, எவர்சில்வர், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பாத்திரங்களில் 25 சதவீதம், கேரளாவுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.கேரள மக்கள் பயன்படுத்தும் டேக் ஷா, கஞ்சி கலயம், வாணா சட்டி போன்ற பாத்திரங்கள் பெரும்பான்மையாக திருப்பூரில் இருந்தே செல்கிறது. கேரளாவில் தற்போது தொற்று அதிகரித்துள்ளது. அங்கு அவ்வப்போது, ஊரடங்கு, அமலாகிறது. வெளிமாநிலங்களில் இருந்து கேரளா செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் வீதிக்கப்பட்டுள்ளது. அங்கு நடக்கும் ஊரடங்கால் பாத்திர விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.''திருப்பூரில் இருந்து பாத்திரங்கள் அனுப்புவது 30 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளா அனுப்புவது பாதிக்கப்பட்டுள்ளதால், உற்பத்தி செய்யப்படும் பாத்திரங்கள் தேக்கமடைகின்றன'' என்கின்றனர் பாத்திர உற்பத்தியாளர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X