பொது செய்தி

தமிழ்நாடு

கூடலுார் தொட்டி பாலத்தில் ஆபத்தை உணராத மக்கள்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கூடலுார் : கூடலுார் 18 ம் கால்வாய் தண்ணீர் வெளியேறும் தொட்டி பாலத்தில் ஆபத்தை உணராமல் மக்கள் குளிக்கவும் பாலத்தை கடந்தும் செல்கின்றனர்.கூடலுார் அருகே சுரங்கனாறு தண்ணீர் வெளியேறும் ஓடையின் குறுக்கேதொட்டிப்பாலம் உள்ளது. லோயர்கேம்ப் தலைமதகில் இருந்து 18 ம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கும் போது இப்பாலம் வழியாக வெளியேறும். சமீபத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் 100 கன
 கூடலுார் தொட்டி பாலத்தில் ஆபத்தை உணராத மக்கள்

கூடலுார் : கூடலுார் 18 ம் கால்வாய் தண்ணீர் வெளியேறும் தொட்டி பாலத்தில் ஆபத்தை உணராமல் மக்கள் குளிக்கவும் பாலத்தை கடந்தும் செல்கின்றனர்.

கூடலுார் அருகே சுரங்கனாறு தண்ணீர் வெளியேறும் ஓடையின் குறுக்கேதொட்டிப்பாலம் உள்ளது. லோயர்கேம்ப் தலைமதகில் இருந்து 18 ம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கும் போது இப்பாலம் வழியாக வெளியேறும். சமீபத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் 100 கன அடிநீர் வெளியேறுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி பச்சை பசேலென்று சுற்றிலும் அடர்ந்த மரங்கள் இருக்க 100 அடி உயரத்தில் உள்ள இப்பாலத்தில் தண்ணீர் வெளியேறும் அழகை ரசிக்க கூடலுார், லோயர்கேம்ப், கம்பம் பகுதியில் இருந்து நாள்தோறும் மக்கள் வருகின்றனர்.

அதே வேளையில் 100 அடி உயர பாலத்தில் மீது ஏறி நின்று தண்ணீரில் குதிப்பதும், பாலத்தைக் கடந்து செல்வதுமாக உள்ளனர். இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அதன்பின் கண்டுகொள்வதில்லை. கண்டுரசிக்க மட்டும் அனுமதி வழங்கி, குளிக்க மற்றும் பாலத்தை கடந்து செல்ல தடை விதிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X