தமிழ்நாடு

வானமே எல்லை... வர்த்தகம் வசப்படுகிறது:சவால்கள்,தடைகளை தகர்த்தெறிய வேண்டும்: உலகின் 'கிரீடம்' சூடலாம்!

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 30, 2021
Share
Advertisement
திருப்பூர்:தொற்று தணிந்துள்ள நிலையில், வர்த்தக வாய்ப்புகள் அதிகரித்துள்ளன; இவற்றை, ஏற்றுமதியாளர்கள் வசப்படுத்துவதன் மூலம், திருப்பூர், வர்த்தகசரிவில் இருந்து விரைவில் மீண்டெழும்; சவால்கள், தடைகளை பொருட்படுத்தாமல், தகர்த்தெறிந்து, இச்சாதனையை புரிய வேண்டும்; மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பு அவசியமானதாக உள்ளது.தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகள்,
வானமே எல்லை... வர்த்தகம் வசப்படுகிறது:சவால்கள்,தடைகளை தகர்த்தெறிய வேண்டும்: உலகின் 'கிரீடம்' சூடலாம்!

திருப்பூர்:தொற்று தணிந்துள்ள நிலையில், வர்த்தக வாய்ப்புகள் அதிகரித்துள்ளன; இவற்றை, ஏற்றுமதியாளர்கள் வசப்படுத்துவதன் மூலம், திருப்பூர், வர்த்தகசரிவில் இருந்து விரைவில் மீண்டெழும்; சவால்கள், தடைகளை பொருட்படுத்தாமல், தகர்த்தெறிந்து, இச்சாதனையை புரிய வேண்டும்; மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பு அவசியமானதாக உள்ளது.

தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகள், திருப்பூரைப் புரட்டிப்போட்டது. இங்குள்ள பின்னலாடை நிறுவனங்கள், உள்ளூர் மற்றும் உலக சந்தைக்காக ஆடைகளை தயாரிக்கின்றன.கடந்த 2018 - 19ம் நிதியாண்டில், இங்கிருந்து, பின்னலாடை ஏற்றுமதி, 27,650 கோடி ரூபாயை எட்டியது; தொற்று பரவலால், 2019 - 20ம் நிதியாண்டில், 27,280 கோடி; 2020 - 21ம் நிதியாண்டில், 24,750 கோடி ரூபாயாகவும், ஏற்றுமதி வர்த்தகம் சரிவை சந்தித்தது.தற்போது, தொற்று குறைந்துள்ளது. தடைகளை உதறிவிட்டு, 'பீனிக்ஸ்' பறவையாக, திருப்பூர் மீண் டெழுகிறது.

சர்வதேச அளவில் உருவாகியுள்ள சாதக மான சூழல்கள், வெற்றி நிச்சயம் என கட்டியம் கூறுகின்றன.பின்னலாடைதேவை அதிகரிப்புமென்மையான தன்மையால், குழந்தைகள் முதல் பெரியவர் வரை, அனைவரும் விரும்புவதாக, பின்னலாடை ரகங்கள் உள்ளன. தொற்று தடுப்பு நடவடிக்கையாக, சர்வதேச அளவில் பல நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை, வீட்டில் இருந்தபடியே அலுவலக பணிகளை மேற்கொள்ளச் செய்கின்றன.இவ்வாறு பணிபுரிவோர், பின்னல் துணியில் தயாரிக்கப்பட்ட டீ சர்ட், பேன்ட் உள்ளிட்ட ஆடை ரகங்களையே தேர்வு செய்து, வாங்கி அணிகின்றனர். அதனால், தற்போது, உலக அளவில் பின்னலாடைகளின் தேவை அதிகரித்துள்ளது.

மலர்ந்தது புதிய வாய்ப்பு

உலகளாவிய ஆடை ஏற்றுமதியில், சீனா ஆதிக் கம் செலுத்திவருகிறது. தொற்று பரவலுக்கு பின், அந்நாடு, உலக நாடுகளில் வெறுப்பை சம்பாதித்துள்ளது. சர்வதேச அளவில் பிரசித்திபெற்ற பல பிராண்டட் நிறுவனங்கள், சீனாவுக்கு மாற்றாக, பிற நாட்டு நிறுவனங்களுக்கு ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்களை வழங்க ஆர்வம் காட்டுகின்றன. இது, இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.தற்போது, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில், மக்கள் அதிகளவு ஆடை ரகங்களை கொள்முதல் செய்யத்துவங்கிவிட்டனர்.

குறிப்பாக, அமெரிக்காவில், 'ரிவென்ச் ஷாப்பிங்' என்ற பெயரில், மக்கள், வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் ஆடை ரகங்களை கொள்முதல் செய்கின்றனர். இதையடுத்து, அந்நாடுகளில் இருந்து திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தற்போது ஆர்டர் வருகை அதிகரித்துள்ளது.வசப்படுத்த வேண்டும்உலக சந்தையில் உருவாகியுள்ள புதிய வர்த்தக வாய்ப்புகளை, திருப்பூர் ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தவறவிடக்கூடாது. ஒவ்வொரு நிறுவனமும், வெளிநாட்டு வர்த்தகரால் விரும்பப்படும் நிறுவனத்தினராக தங்களை மாற்றிக்காட்டவேண்டும்.

இதற்கு, நிலையான தரத்தில், குறித்த காலத்துக்குள் ஆடை தயாரித்தல்; சரியான எண்ணிக்கையில் ஆடை தயாரித்தல் அவசியம்.வெளிநாட்டு வர்த்தகர்கள், சிறந்த ஆடை உற்பத்தியாளர்களையே தேடிக்கொண்டிருக்கின்றனர். அந்த சிறந்த உற்பத்தியாளர் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் இருந்தால், அவர்களை வர்த்தகர்கள் கடந்துசெல்ல மாட்டார்கள். இதனால், உற்பத்தி செய்யும் ஆடைகளுக்கு சிறந்த விலை பெற்று, நிறுவனத்தை தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி பயணிக்கச் செய்ய முடியும்.

மதிப்பு கூட்டுதல் அவசியம்

பாலியெஸ்டர், விஸ்கோஸ், மொடால் போன்ற செயற்கை இழைகளில் தயாரிக்கப்படும் ஆயத்த ஆடைகளின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. திருப்பூர் பின்னலாடை துறையினர், செயற்கை இழையில், விளையாட்டு, டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் போன்ற மதிப்பு கூட்டு ஆடை ரகங்கள் தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.போட்டியாளர்களை எதிர்கொள்ளவும், ஆடைகளுக்கு அதிக விலை பெற்று, நிறுவன லாபத்தை அதிகரிக்க; ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து நிலை நிறுத்திக்கொள்ளவும் மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்பு கைகொடுக்கும்.திருப்பூர் தொழில்முனைவோர், குறிப்பிட்ட சில மேற்கத்திய நாடுகளில் வர்த்தகம் புரிவதில்தான் கவனம் செலுத்துகின்றனர்.

திருப்பூர் ஆடைகள் அறிமுகம் இல்லாத ஏராளமான நாடுகளிலும், வர்த்தகத்தை கோலோச்சுவதற்கான வழியையும் தொழில்முனைவோர் தேட வேண்டும்.புதுமை பிறந்ததுஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, கண்காட்சிகள், புதிய வர்த்தக வாய்ப்புகளை பெற்று தருகின்றன. அதிக கட்டணம்; போக்குவரத்து செலவினங்கள் காரணமாக, வெளிநாடுகளில் நடைபெறும் நேரடி கண்காட்சிகளில் பங்கேற்க, பல ஏற்றுமதியாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

தற்போது, அமெரிக்கா, ஐரோப்பா, கனடா உட்பட பல்வேறு நாடுகளில், பிரசித்தி பெற்ற கண்காட்சிகள் அனைத்தும், புதுமையான மென்பொருட்கள் உதவியுடன், மெய்நிகர் கண்காட்சிகளாக நடத்தப்பட்டு வருகிறது.இந்த தளத்தில், ஏற்றுமதி நிறுவனங்கள், தாங்கள் தயாரித்த புதுமையான ஆடைகளை எளிதாக காட்சிப்படுத்தி, வர்த்தக வாய்ப்புகளை பெற முடிகிறது.

குறைந்த பங்கேற்பு கட்டணம்; போக்குவரத்து செலவினங்கள் தவிர்க்கப்படுவதால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் எளிதாக மெய்நிகர் கண்காட்சிகளில் பங்கேற்க முடிகிறது.வழக்கமாக மூன்று நாட்கள் நடைபெறும் கண்காட்சிகள், தற்போது, மெய்நிகர் வடிவில், தற்போது இரண்டு மாதங்கள் வரை நடக்கின்றன. அதனால், வர்த்தகர்கள், இருப்பிடத்தில் இருந்தவாறே, கண்காட்சியில் இடம்பெறும் ஆடை ரகங்களை நிதானமாக, முழுமையாக பார்வையிடுகின்றனர். அதனால், ஏற்றுமதி நிறுவனங்கள், குறைந்த செலவில், அதிக ஆர்டர்களை கைப்பற்ற வாய்ப்பாகிறது.பின்னலாடை ஏற்றுமதியில், உலகளவில் 'கிரீடம்' சூட முடியும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நினைத்தால்...!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X