பிள்ளை கைவிட்டாலும் தென்னை கைவிடாது:வெட்ட மனம் இல்லாமல், வேரோடு பெயர்த்து மறுநடவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பிள்ளை கைவிட்டாலும் தென்னை கைவிடாது':வெட்ட மனம் இல்லாமல், வேரோடு பெயர்த்து மறுநடவு

Added : ஆக 30, 2021 | கருத்துகள் (1)
Share
திருப்பூர்:தங்கள் தோப்பில் இருந்த தென்னை மரங்களை வெட்ட மனமில்லா மல், வேரோடு பெயர்த்து தோப்பின் மற்றொரு பகுதியில், தம்ப தியர் நட்டு, அவற்றுக்கு 'மறுவாழ்வு' அளித்துள்ளனர்.மங்கலம் அடுத்த வேட்டுவபாளையம் சிவசக்தி கார்டனை சேர்ந்தவர்கள் சசிக்குமார் - மேகலா தம்பதியர்; இவர்களது தென்னந்தோப்பில், 300 தென்னை மரங்கள் உள்ளன.தோட்டத்தின் ஒரு பகுதியில் குடோன் கட்ட
 'பிள்ளை கைவிட்டாலும் தென்னை கைவிடாது':வெட்ட மனம் இல்லாமல், வேரோடு பெயர்த்து மறுநடவு

திருப்பூர்:தங்கள் தோப்பில் இருந்த தென்னை மரங்களை வெட்ட மனமில்லா மல், வேரோடு பெயர்த்து தோப்பின் மற்றொரு பகுதியில், தம்ப தியர் நட்டு, அவற்றுக்கு 'மறுவாழ்வு' அளித்துள்ளனர்.மங்கலம் அடுத்த வேட்டுவபாளையம் சிவசக்தி கார்டனை சேர்ந்தவர்கள் சசிக்குமார் - மேகலா தம்பதியர்; இவர்களது தென்னந்தோப்பில், 300 தென்னை மரங்கள் உள்ளன.தோட்டத்தின் ஒரு பகுதியில் குடோன் கட்ட வேண்டியிருந்தது.அதற்கு 37 தென்னைகளை அகற்ற வேண்டியிருந்தது. 20 ஆண்டு வளர்த்த மரங்களை வெட்ட மனமின்றி, வேரோடு பெயர்த்து, தோப்பின் வேறு பகுதியில், தம்பதியர், மரங்களை நட்டனர்.அவர்கள் கூறியதாவது:நாட்டு தென்னம்பிள்ளை ஒன்றின் விலை 700 ரூபாய். அதை நட்டு வைத்து 20 ஆண்டு பராமரிக்க குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாய் செலவாகும். தமிழக அரசு, மின் டவர் அமைக்கும் பணிக்காக, தென்னைகளை வெட்டும்போது, 10 ஆண்டுக்கும் மேற்பட்ட மரத்துக்கு குறிப்பிடத்தக்க தொகையை இழப்பீடாக வழங்குகிறது.பெற்ற பிள்ளையே கைவிட்டாலும், வைத்த தென்னம்பிள்ளை கைவிடாது என நம் முன்னோர் கூறியுள்ளனர். இதை எண்ணி, மரத்தை அழிக்காமல் வேறு இடத்தில் நடவு செய்ய முடிவெடுத்தோம்.கிரேன் மற்றும் ஜே.சி.பி., உதவியுடன் இப்பணிகளை செய்தோம். 75 ஆயிரம் ரூபாய் செலவானது. பல்வேறு காரணங்களுக்காக மரங்களை வெட்ட நினைப்பவர்கள், சிறிது செலவு செய்தால், மரங்களை காப்பாற்றுவதுடன் சுற்றுச்சூழலையும் காக்கலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X