மொரேனா-மத்திய பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 16 வயது சிறுவன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.
நம் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சிறுவனுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.வலிப்பு நோய்ம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுஹான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.இங்கு மொரேனா மாவட்டம் அம்பாவை அடுத்த பாக்கா புராவை சேர்ந்தவர் கமலேஷ் குஷ்வாஹா. இவரது மகன் பில்லு, 16.நேற்று முன்தினம், அப்பகுதியில் உள்ள மையத்தில் பில்லுவிற்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவனுக்கு தலைசுற்றல் ஏற்பட்டதுடன், வாயில் நுரை தள்ளியது. அந்த சிறுவன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். இதுபற்றி மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஷர்மா கூறியதாவது:குவாலியர் மருத்துவமனைக்கு செல்லும்படி கூறியும், பில்லு சொந்த ஊர் சென்றதாக தெரிகிறது. இதனால், அவரது வீட்டிற்கு மருத்துவக்குழுவை அனுப்பி உள்ளோம். அவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவரா என, ஆய்வு செய்யும் அவசியம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினர்.
கேள்வி எழுந்துள்ளது
நம் நாட்டில் கொரோனா தடுப்பூசி 18 வயது நிறைவடைந்தோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாறாக 16 வயது சிறுவனுக்கு எப்படி தடுப்பூசி செலுத்தப்பட்டது என, கேள்வி எழுந்துள்ளது.இதுதொடர்பாக விசாரணை நடத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE