பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனத்தில் 37 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனத்தில் ஒரே நாளில் 37 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த 23ம் தேதியிலிருந்து நேற்று 29ம் தேதி வரை அங்கன்வாடி மையம், நகராட்சி அலுவலகம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடந்தது.கடைசி நாளான நேற்று திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட
 திண்டிவனத்தில் 37 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

திண்டிவனம் : திண்டிவனத்தில் ஒரே நாளில் 37 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த 23ம் தேதியிலிருந்து நேற்று 29ம் தேதி வரை அங்கன்வாடி மையம், நகராட்சி அலுவலகம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடந்தது.

கடைசி நாளான நேற்று திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட அங்கன்வாடி மையங்கள், பஸ் நிலையம், மார்க்கெட் பகுதி, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட 37 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடந்தன.நகராட்சி கமிஷனர் சவுந்தர்ராஜன் மேற்பார்வையில் நடந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள், நகராட்சி பணியாளர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.தாலுகா அலுவலகம் எதிரில் அமைக்கப்பட்ட முகாமில், தாசில்தார் செல்வம் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X