பொது செய்தி

தமிழ்நாடு

கிரைம் செய்திகள்...

Added : ஆக 30, 2021
Share
Advertisement
மது பாட்டில் விற்றவர் கைதுதிருவெண்ணெய்நல்லுார்: டி.எடையார் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற சின்னமுத்து மகன் தவிட்டுராயன், 63; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.முன்விரோதம்: 8 பேர் மீது வழக்குவிழுப்புரம்: ஒட்டன்காடுவெட்டியைச் சேர்ந்தவர்

மது பாட்டில் விற்றவர் கைது

திருவெண்ணெய்நல்லுார்: டி.எடையார் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற சின்னமுத்து மகன் தவிட்டுராயன், 63; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முன்விரோதம்: 8 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: ஒட்டன்காடுவெட்டியைச் சேர்ந்தவர் பழனி, 48; இவரது தம்பி சண்முகம், 46; இருவருக்குமிடையே பூர்வீக வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 27ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், சண்முகம், அவரது மனைவி ஆரவள்ளி, 37; மற்றும் பழனி, அவரது மகன்கள் ராஜகுரு, ராஜசேகர், சபரிநாதன் ஆகியோர் திட்டி தாக்கிக்கொண்டனர்.இருதரப்பு புகாரின்பேரில், சண்முகம், பழனி உட்பட 6 பேர் மீது காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சாராயம் விற்ற 3 பெண்கள் கைது

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டியில் இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் புனிதவதி மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியில் வீட்டில் சாராயம் பதுக்கி விற்ற கருப்பு மணிகண்டனின் மனைவி வனிதா, 30; உதயகுமார் மனைவி மச்சகாந்தி, 27; கண்ணன் மனைவி பெரியாயி, 35; ஆகியோரை கைது செய்து, மூவரிடமிருந்தும் 20 லிட்டர் சாராயத்தைப் பறிமுதல் செய்தனர்.மகள் மாயம்: தந்தை புகார்திருக்கோவிலுார்: ஜா.சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் அமலாவதி, 21; பிளஸ் 2 படித்துள்ளார். 2 மாதங்களாக முருக்கம்பாடியில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தார். இவரை, கடந்த 27ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து, ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில், மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வயிற்று வலி: முதியவர் தற்கொலை
ரிஷிவந்தியம்: பாசார் காலனியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 70; இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவருக்கு அவ்வப்போது வயிற்று வலி ஏற்படும். இந்நிலையில் நேற்று முன்தினம் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த அவர் அரளி விதையை அரைத்து குடித்து விட்டு, தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். உடன் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

சாராயம் பதுக்கிய 2 பெண்கள் கைது

திண்டிவனம்: கீழ் எடையாளம் பகுதியில், திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் ராதிகா தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அப்பகுதியில், எரி சாராயம் பதுக்கி வைத்திருந்த மணி மனைவி நாகம்மாள், 66; மற்றும் கோவிந்தசாமி மனைவி பார்வதி, 67; ஆகியோரை கைது செய்து இருவரிடமிருந்தும் தலா 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

ஆட்டோ சேதம்: இருவர் கைது

திருக்கோவிலுார்: அத்தண்டமருதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகாசலம், 53; ஆட்டோ டிரைவர். திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்தியிருந்தார். சக ஆட்டோ டிரைவர்களான சந்தப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த், 37; பிரபு, 35; ஆகியோர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தணிகாசலத்தின் ஆட்டோவில் படுத்தனர். இதனைத் தணிகாசலம் தட்டிக்கேட்டதால், அவரைத் தாக்கி, ஆட்டோவை சேதப்படுத்தினர். புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, ஆனந்த், பிரபு இருவரையும் கைது செய்தனர்.

மகன் மாயம்: தந்தை புகார்

திருக்கோவிலுார்: பனப்பாடியைச் சேர்ந்தவர் சடையப்பிள்ளை மகன் வெற்றிவேல், 19; பிளஸ் 2 முடித்துவிட்டு பாட்டியின் பாதுகாப்பில் வீட்டில் இருந்து வருகிறார். பெற்றோர்கள் பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகின்றனர். வெற்றிவேல் மொபைல்போனில் எப்போதும் கேம் விளையாடிக் கொண்டிருப்பதை தந்தை சடைய பிள்ளை கண்டித்தார். இந்நிலையில், வெற்றிவேலை கடந்த 23ம் தேதி முதல் காணவில்லை. புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X