பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., மீது மக்கள் அதிருப்தி 'மாஜி' அமைச்சர் பேச்சு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
வானுார் : கிளியனுார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.சக்கரபாணி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் பக்தவச்சலம் வரவேற்றார்.முன்னாள் அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கி பேசுகையில், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் கடந்து விட்டன. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில்
 தி.மு.க., மீது மக்கள் அதிருப்தி 'மாஜி' அமைச்சர் பேச்சு

வானுார் : கிளியனுார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

சக்கரபாணி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் பக்தவச்சலம் வரவேற்றார்.முன்னாள் அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கி பேசுகையில், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் கடந்து விட்டன. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை முடக்கியுள்ளனர்.இ.பி.எஸ்., முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு போடுகிறார்கள். குறுகிய காலத்தில் தி.மு.க., ஆட்சி மீது, மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும்' என்றார்.நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., ஜானகிராமன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ரகுராமன், மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி செல்லபெருமாள், இணைச் செயலாளர் சந்தியா, ஒன்றிய அவைத் தலைவர் ஜெயராமன், பொருளாளர் நாராயணன், துணைச் செயலாளர்கள் ஆறுமுகம், தேவி, கிளியனுார் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவர் பிரபு, ஐ.டி., பிரிவு செயலாளர் கோகுல்ராஜ், தலைவர் பரத்குமரன், மகளிர் அணி செயலாளர் சிவரஞ்சனி, பாசறை செயலாளர் சுமன், மாணவரணி தலைவர் காமேஷ், இலக்கிய அணி அறிவழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X