திருக்கோவிலுார் நுாலகத்தில் 66ம் ஆண்டு துவக்க விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கோவிலுார் நுாலகத்தில் 66ம் ஆண்டு துவக்க விழா

Added : ஆக 30, 2021
Share
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள வட்டார முழுநேர நுாலகத்தில் 66ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.வாசகர் வட்ட தலைவர் உதியன் தலைமை தாங்கினார். கவிஞர் அருள்நாநன் தங்கராசு, கலைமணி, நுாலகர் தியாகராஜன் முன்னிலை வகித்தனர். நுாலகர் அன்பழகன் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி
 திருக்கோவிலுார் நுாலகத்தில் 66ம் ஆண்டு துவக்க விழா

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள வட்டார முழுநேர நுாலகத்தில் 66ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.

வாசகர் வட்ட தலைவர் உதியன் தலைமை தாங்கினார். கவிஞர் அருள்நாநன் தங்கராசு, கலைமணி, நுாலகர் தியாகராஜன் முன்னிலை வகித்தனர். நுாலகர் அன்பழகன் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார்.ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கல்யாணகுமார், நுாலக புரவலர் பெண்ணை வளவன், மாணவி பிசா உட்பட பலர் பங்கேற்றனர். நுாலகர் சாந்தி நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X