துாக்குப் போட்டு இறந்த காதலன் ஒரு மாதத்தில் காதலியும் தற்கொலை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துாக்குப் போட்டு இறந்த காதலன் ஒரு மாதத்தில் காதலியும் தற்கொலை

Added : ஆக 30, 2021 | கருத்துகள் (1)
Share
செஞ்சி : செஞ்சியில் காதலன் தற்கொலை செய்து கொண்டதால், மனமுடைந்த காதலியும் தற்கொலை செய்து கொண்டார். செஞ்சி, ராஜேந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மகள் கீதா, 22; பேஷன் டெக்னாலஜி படித்தவர். இவர் குடும்பத்துடன் செஞ்சி, பெரியகரம் பகுதியில் வசித்த போது, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி, 27; என்ற வாலிபரை காதலித்தார்.இதற்கு கீதா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

செஞ்சி : செஞ்சியில் காதலன் தற்கொலை செய்து கொண்டதால், மனமுடைந்த காதலியும் தற்கொலை செய்து கொண்டார்.

செஞ்சி, ராஜேந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மகள் கீதா, 22; பேஷன் டெக்னாலஜி படித்தவர். இவர் குடும்பத்துடன் செஞ்சி, பெரியகரம் பகுதியில் வசித்த போது, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி, 27; என்ற வாலிபரை காதலித்தார்.இதற்கு கீதா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் கீதாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். இதனால் மனமுடைந்த கார்த்தி கடந்த மாதம் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனால் கீதா, கடும் மன வேதனையில் இருந்தவர், நேற்று வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X