பொது செய்தி

இந்தியா

ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை; ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 30, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
லக்னோ-“பகவான் ராமர் இல்லையென்றால் அயோத்தி ஒன்றுமே இல்லை,” என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நடக்கிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று அயோத்தி வந்தார். அங்கு ராமாயண மாநாட்டை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை. பகவான் ராமர் இங்கு நிரந்தரமாக வாழ்கிறார்.
ராமர், இல்லை, அயோத்தி, இல்லை, ராம்நாத் கோவிந்த்

லக்னோ-“பகவான் ராமர் இல்லையென்றால் அயோத்தி ஒன்றுமே இல்லை,” என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நடக்கிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று அயோத்தி வந்தார். அங்கு ராமாயண மாநாட்டை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:ராமர் இல்லாமல் அயோத்தி இல்லை. பகவான் ராமர் இங்கு நிரந்தரமாக வாழ்கிறார். ராமர் மீது கொண்ட பக்தியால் தான், என் பெற்றோர் எனக்கு இந்த பெயரைச் சூட்டினர். ரகு வம்ச அரசர்களிடத்தில் இருந்து அயோத்தியை யாராலும் வெல்ல முடியாது.


latest tamil news


பழங்குடியினர் மீது ராமர் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். வனவாச காலத்தில் அயோத்தியில் இருந்தோ, மிதிலையில் இருந்தோ படைகளை அழைக்கவில்லை. வானரங்களையும், ஜடாயுவையும் தன் படையில் சேர்த்துக் கொண்டார். பழங்குடியினர் மீது அன்பும், நட்பும் பாராட்டினார்.இவ்வாறு அவர் பேசினார்.

தரிசனம்ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினர், ராமர் கோவில் கட்டப்படும் வளாகத்தில் சிறிய அளவில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கோவிலில் தரிசனம் செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - kottambatti,இந்தியா
30-ஆக-202118:07:20 IST Report Abuse
Raman ஆமாம் ராமர் இல்லைனா பாஜக இல்லை. அது இல்லைனா நீயே இல்லை.. ஹா ஹா ஹா
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
30-ஆக-202116:26:56 IST Report Abuse
s t rajan இராமர் இல்லாமல் இந்தியா இல்லை. ஆகவே அயோத்தி வேந்தன் இராமன் இல்லாமல் இந்தியர்கள் இல்லை.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
30-ஆக-202116:00:27 IST Report Abuse
Vena Suna இப்படி பேசி தான் ராஜாஜி திராவிட முன்னேற்ற கழகத்துடன் இணைந்து வெற்றி கண்டார். ஆனால் அவர்கள் ஆட்சியை பிடிக்க மக்கள் தோல்வி கண்டனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X