பொது செய்தி

தமிழ்நாடு

மீன் வளர்ப்பு குளம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீன் குஞ்சு வளர்ப்பு குளம் அமைக்க மானியம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கலெக்டர் ஸ்ரீதர் செய்திக்குறிப்பு:தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டம் 2021-22ன் கீழ் மீன் குஞ்சு உற்பத்தியை அதிகரித்திட குளம் அமைக்க மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள பயனாளிகள்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீன் குஞ்சு வளர்ப்பு குளம் அமைக்க மானியம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கலெக்டர் ஸ்ரீதர் செய்திக்குறிப்பு:தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டம் 2021-22ன் கீழ் மீன் குஞ்சு உற்பத்தியை அதிகரித்திட குளம் அமைக்க மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். ஒரு எக்டேரில் 6 லட்சம் ரூபாய் செலவில் குளம் அமைத்திட, 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

ஒரு எக்டேர் நீர் பரப்பில் மீன் வளர்க்க உள்ளீட்டு செலவீனத்திற்கான தொகை 1.50 லட்சம் ரூபாயில் 40 சதவீதம் மானியமும் வழங்கப்படும்.விருப்பம் உள்ளவர்கள் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர், மீன் வள உதவி இயக்குனர் அலுவலகம், எண்.10, முதல் தளம், நித்தியானந்தம் நகர், வழுதரெட்டி, விழுப்புரம் 605 401 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.இது தொடர்பான விபரங்களுக்கு 04146 - 259329 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X