பொது செய்தி

தமிழ்நாடு

கடலூர் மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 1,206 மி.மீ

Added : ஆக 30, 2021
Share
Advertisement
கடலூர் : கடந்த எட்டு மாதங்களில் 953.31 மி.மீ., பதிவு கடலுார் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 1,206 மி.மீ., மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஜனவரி முதல் ஜூலை வரை மாவட்டத்தில் குறைந்த அளவே மழை பெய்யும்.தொடர்ந்து ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக மழை பெய்வது வழக்கம். ஆனால், இந்தாண்டு ஜனவரி மாதத்தில் இருந்தே சராசரி அளவைவிட அதிக மழை பெய்து

கடலூர் : கடந்த எட்டு மாதங்களில் 953.31 மி.மீ., பதிவு கடலுார் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 1,206 மி.மீ., மழை பெய்து வருகிறது.

குறிப்பாக ஜனவரி முதல் ஜூலை வரை மாவட்டத்தில் குறைந்த அளவே மழை பெய்யும்.தொடர்ந்து ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக மழை பெய்வது வழக்கம். ஆனால், இந்தாண்டு ஜனவரி மாதத்தில் இருந்தே சராசரி அளவைவிட அதிக மழை பெய்து வருகிறது.

அதன்படி, ஜன.,மாதம் சராசரியாக 27.9 மி.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், 10 மடங்கு அதிகமாக 273.58 மி.மீ., மழை பெய்தது. பிப்., மாதம் சராசரி மழையான 16.2 மி.மீ., விட 18 மடங்கு அதிகமாக 297.60 மி.மீ., மழை பெய்தது. மார்ச் மாதம் சராசரியான 14.6 மி.மீ.,க்கு பதில் 0.26 மி.மீ., மழையும், ஏப்., மாதம் 17 மி.மீ.,க்கு பதில் 4.90மி.மீ., என மிக குறைந்த அளவு மழை பெய்துள்ளது.

அதே சமயத்தில் மே மாதம் சராசரி அளவான 50.10 மி.மீ.,க்கு பதில் 64.64 மி.மீ., மழை, ஜூன் மாதம் 47.3 மி.மீ.,க்கு பதில் 52.87 மி.மீ., மழை, ஜூலை மாதம் 75.1 மி.மீ.,க்கு பதில் 144.16 மி.மீ., என, கூடுதல் மழை பெய்துள்ளது.ஆகஸ்ட் மாதம்29ம் தேதி வரை சராசரி மழை அளவு 129.2 மி.மீ.,ல் 110.30 மி.மீ., பதிவாகியுள்ளது.மொத்தத்தில் இந்தாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் சராசரியாக 377.4 மி.மீ., மழை பெய்யவேண்டும்.

ஆனால், மூன்று மடங்கு அதிகமாக 953.31 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதனால், மாவட்டத்தில்நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.அதே சமயத்தில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளும் வேகமாக நிரம்பிவருகின்றன.வானமாதேவியில் 30 மி.மீ., மழைமாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்கிறது. நேற்று காலை 8.30 மணி வரை பெய்தமழையின் அளவு;வானமாதேவி 30 மி.மீ., ஸ்ரீமுஷ்ணம் 24.30, கலெக்டர் அலுவலகம் 21.50, விருத்தாசலம் 15, பெலாந்துறை 13.60,குப்பநத்தம் 11.80, கடலுார் 11.20, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி 10, பண்ருட்டி 7, சிதம்பரம் 5, பரங்கிப்பேட்டை 4.60, வடகுத்து4, குறிஞ்சிப்பாடி 3, சேத்தியாதோப்பு 2.40, கொத்தவாச்சேரி 2, கீழ்ச்செருவாய் 2, மேமாத்துார் 2, அண்ணாமலை நகர் 1.40,புவனகிரி 1, காட்டுமன்னார்கோவில் 1 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 172.80 மி.மீ., மழைபெய்துள்ளது. சராசரி மழை 6.91 மி.மீ., ஆகும்.

நிரம்பும் நீர்நிலைகள்கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக வினாடிக்கு 208 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. வீராணம் ஏரி தற்போது நிரம்பியுள்ளது. அணைக்கு 52 கன அடி தண்ணீர் வருகிறது. சென்னை குடிநீருக்காக 52 கன அடி அனுப்பப்படுகிறது. சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு வெள்ளாறு ராஜன் வாய்க்கால் வழியாக தண்ணீர் வருகிறது.7.50 அடியில், 4.30 அடி நிரம்பியுள்ளது.5.50 அடி கொள்ளளவு உடைய வாலாஜா ஏரி நிரம்பியது.

இதனால் ஏரிக்கு வரும் 140 கனஅடி தண்ணீர்பெருமாள் ஏரிக்கு திறந்து விடப்படுகிறது. தவிர விவசாய பாசனத்துக்காக வாலாஜா ஏரியில் இருந்துதண்ணீர் திறக்கப்படுகிறது.6.50 அடி கொள்ளளவு கொண்ட பெருமாள் ஏரியில் 1.60 கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வரும் 95கனஅடி தண்ணீர் விவசாய பாசனத்திற்காக வெளியேற்றப்படுகிறது. 29.72 அடி உள்ள வெலிங்கடன் ஏரி 11.90 அடி நிரம்பிஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X