பொது செய்தி

தமிழ்நாடு

கஞ்சா புழக்கம் சமுதாயத்தை சீரழித்து விடும்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
விருத்தாசலம், ஆக. 30-'ஆசிரியர்கள் கடமையை உணர்ந்து பணிபுரிந்தால், அதைவிட வேறு புண்ணியம் இல்லை' என விருத்தாசலத்தில் நீதிபதி புகழேந்தி பேசினார்.விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நுாற்றாண்டு விழா கொண்டாட உள்ளனர்.இதையடுத்து , பள்ளியின் முன்னாள் மாணவரும், மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதியுமான புகழேந்தி, விருத்தாசலம் பள்ளியில் நடந்த முன்னாள் மாணவர்கள் ஆலோசனை
 கஞ்சா புழக்கம் சமுதாயத்தை சீரழித்து விடும்

விருத்தாசலம், ஆக. 30-

'ஆசிரியர்கள் கடமையை உணர்ந்து பணிபுரிந்தால், அதைவிட வேறு புண்ணியம் இல்லை' என விருத்தாசலத்தில் நீதிபதி புகழேந்தி பேசினார்.விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நுாற்றாண்டு விழா கொண்டாட உள்ளனர்.இதையடுத்து , பள்ளியின் முன்னாள் மாணவரும், மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதியுமான புகழேந்தி, விருத்தாசலம் பள்ளியில் நடந்த முன்னாள் மாணவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.முன்னதாக, வகுப்பறை கட்டடங்கள், விளையாட்டு மைதானம், கழிவறையை பார்வையிட்டு, பராமரிப்பின்றி பாழாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.பள்ளியில் கல்வி உபகரணங்கள், தளவாடப் பொருட்கள் திருட்டு, மாணவர்களிடம் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு குறித்து முன்னாள் மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.அதிருப்தியடைந்த அவர், டி.எஸ்.பி., மோகன், இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் ஆகியோரை அழைத்து, கஞ்சா புழக்கம் சமுதாயத்தை சீரழித்து விடும். விரைவாக நடவடிக்கை எடுங்கள் என அறிவுரை வழங்கினார்.பின்னர், ஆலோசனை கூட்டத்தில் நீதிபதி புகழேந்தி பேசுகையில், இந்த பள்ளி செங்கல், மணல் இணைந்த கட்டடம் மட்டும் இல்லை. மாணவரின் ஒழுக்கம், ஆசிரியரின் அர்ப்பணிப்பு இணைந்தது.தற்போது இப்பள்ளி மாணவர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர் என்பதை கேட்கும் போது வருத்தமடைந்தேன்.நாம் பயின்ற பள்ளியில் யாராவது ஒரு மாணவன் தவறு செய்தாலும் அது நமக்கும் பொருந்தும்.தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. நுாற்றாண்டு விழாவுக்கு அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், முதல்வர் என யாரையும் சந்திக்க முன்னாள் மாணவர் என்ற முறையில் நானும் வருகிறேன்.முதல்வரை, விழாவுக்கு அழைப்போம். அவர் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில், மாணவர் சங்கத் தலைவர் அருணாச்சலம், செயலாளர் வழக்கறிஞர் பாலச்சந்திரன், பொருளாளர் சீனிவாசன், ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் சுரேஷ் சந்த், அரசு வழக்கறிஞர் விஜயகுமார், பொறியாளர் கென்னடி, தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வினோத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X