பொது செய்தி

இந்தியா

புதுச்சேரி விமான நிலையம் வெங்கடேசன் எம்.எல்.ஏ., கோரிக்கை

Added : ஆக 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி விமான நிலையம் மீண்டும் முழு வீச்சில் செயல்பட நடவடிக்கை வேண்டும் என பா.ஜ., எம்.எல்.ஏ., வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி மாநிலம் பெரிதும் சுற்றுலாவை நம்பி உள்ளது. அதில் வரக்கூடிய வருவாய் மிக முக்கியமாக இருந்து வருகிறது. ஆகவே, புதுச்சேரி அரசாங்கம், சுற்றுலாவை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.சுற்றுலாவில்

புதுச்சேரி : புதுச்சேரி விமான நிலையம் மீண்டும் முழு வீச்சில் செயல்பட நடவடிக்கை வேண்டும் என பா.ஜ., எம்.எல்.ஏ., வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி மாநிலம் பெரிதும் சுற்றுலாவை நம்பி உள்ளது.

அதில் வரக்கூடிய வருவாய் மிக முக்கியமாக இருந்து வருகிறது. ஆகவே, புதுச்சேரி அரசாங்கம், சுற்றுலாவை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.சுற்றுலாவில் போக்குவரத்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புதுச்சேரியை பொறுத்தவரை சாலை மற்றும் ரயில் போக்குவரத்துக்கு எவ்வித குறைபாடும் இல்லை.ஆனால், பிற மாநிலத்தவர், வெளி நாட்டினர் புதுச்சேரிக்கு வருவதில் பெரும் சிக்கல் உள்ளது.

கொரோனா காரணமாக புதுச்சேரிக்கு விமானங்கள் ஏதும் இயக்கப்படவில்லை.தற்போது கொரோனா பரவல் குறைந்து, பல நகரங்களில் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மட்டும் இன்னமும் விமான நிலையம் செயல்படாமல் முடங்கி உள்ளது. எனவே, புதுச்சேரி விமான நிலையம், முழு வீச்சில் மீண்டும் செயல்பட நடவடிக்கை வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
30-ஆக-202119:37:50 IST Report Abuse
Vijay D Ratnam ஆளே இல்லாத கடைல யாருக்குய்யா டீ ஆத்துறீங்க. ஜஸ்ட் 120 கிமீ தூரத்தில் ஒன்றரை மணி நேர பயணத்தில் சகல வசதிகளுடன் அதிக பயணிகளை சரக்குகளை கையாளும் இந்தியாவின் மூன்றாவது பெரிய சர்வதேச விமான நிலையம் சென்னை இருக்கும்போது புதுச்சேரியில் ஒரு விமான நிலையம் என்பது தண்ட செலவு. ஆனால் இந்த புதுச்சேரி அரசியல்வியாதிகள் ரொம்ப தெளிவானவர்கள். வெறும் 20 கிமீ தொலைவில் இருக்கும் கடலூர் ஜங்க்ஷனுக்கு ரயில்பாதை அமைக்கும் பணியை தொடங்குங்கள் என்று வாயை தொறக்கவே மாட்டார்கள். பிகாஸ் புதுச்சேரி அரசியல்வியாதிகள் பெரும்பாலோர் பஸ் கம்பெனி முதலாளிகள். சென்ற காங்கிரஸ் ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சரே ஒரு பெரிய பஸ் கம்பெனி முதலாளிதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X