கடலுார் சில்வர் பீச்சில் திரண்ட மக்கள் கூட்டம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் சில்வர் பீச்சில் திரண்ட மக்கள் கூட்டம்

Added : ஆக 30, 2021
Share
கடலுார் : கடலுார் சில்வர் பீச்சில் விடுமுறை நாளான நேற்று பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் கூடியது.தமிழகத்தில் கொரோனா பரவல் குறையத் துவங்கியதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 23ம் தேதி முதல் கடற்கரைகள், பூங்காக்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. விடுமுறை நாளான நேற்று கடலுார்சில்வர் பீச்சில் காலை முதலே பொதுமக்கள் குவியத் துவங்கினர்.
 கடலுார் சில்வர் பீச்சில் திரண்ட மக்கள் கூட்டம்

கடலுார் : கடலுார் சில்வர் பீச்சில் விடுமுறை நாளான நேற்று பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் கூடியது.தமிழகத்தில் கொரோனா பரவல் குறையத் துவங்கியதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 23ம் தேதி முதல் கடற்கரைகள், பூங்காக்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. விடுமுறை நாளான நேற்று கடலுார்சில்வர் பீச்சில் காலை முதலே பொதுமக்கள் குவியத் துவங்கினர். மாலை அதிகளவில் கூட்டம் கூடியது.பொது மக்கள் கடற்கரையில் அமர்ந்து கடலின் அழகை ரசித்தும், கடலில் குளித்தும் மகிழ்ந்தனர். விளையாட்டுஉபகரணங்களில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.பெரும்பாலான மக்கள் முகக் கவசம் அணியாமல் சுற்றித் திரிந்ததால்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் கூட்டம் அதிகளவில் கூடியதால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X