மனதின் குரல் நிகழ்ச்சி | Dinamalar

பொது செய்தி

இந்தியா

'மனதின் குரல்' நிகழ்ச்சி

Added : ஆக 30, 2021
Share
திருக்கனுார் : பிரதமர் மோடியின், 'மனதின் குரல்' நிகழ்ச்சி நேரடி ஒலிபரப்பை, மணலிப்பட்டில், அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் கிராம மக்கள் கேட்டனர்.பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுடன் கலந்துரையாடும், 'மன் கி பாத்' என்ற மனதின் குரல் நிகழ்ச்சி, அகில இந்திய வானொலியில் நேற்று காலை 11:00 மணி அளவில் நாடு முழுவதும் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது.அதையொட்டி, மண்ணாடிப்பட்டு
 'மனதின் குரல்' நிகழ்ச்சி

திருக்கனுார் : பிரதமர் மோடியின், 'மனதின் குரல்' நிகழ்ச்சி நேரடி ஒலிபரப்பை, மணலிப்பட்டில், அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் கிராம மக்கள் கேட்டனர்.பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுடன் கலந்துரையாடும், 'மன் கி பாத்' என்ற மனதின் குரல் நிகழ்ச்சி, அகில இந்திய வானொலியில் நேற்று காலை 11:00 மணி அளவில் நாடு முழுவதும் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது.

அதையொட்டி, மண்ணாடிப்பட்டு தொகுதி மணலிப்பட்டு ஐயனார் கோயில் அருகே வயல்வெளி பகுதியில், பா.ஜ., சார்பில் பிரதமர் மோடியின் 'மன் கி பாத்' நிகழ்ச்சி நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், பா.ஜ., பிரமுகர்கள் வீரராகவன், சேகர், கலியபெருமாள், சிவம், தமிழ்மணி, ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X