பொது செய்தி

தமிழ்நாடு

பேசும் பெருமான் கோவில்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு : தினமலர் செய்தி எதிரொலியால் பாழடைந்த வானமாதேவி பேசும் பெருமான் கோவிலை சுத்தப்படுத்தும் பணியை அறநிலைய அதிகாரிகள் துவக்கினர். சேத்தியாத்தோப்பு அடுத்த வானமாதேவியில் சோழர்காலத்தில் கட்டிய பேசும் பெருமான் கோவில் சிதிலமடைந்து, கோவில் நிலங்கள் தனிநபர்கள் பிடியில் இருப்பது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.ஸ்ரீமுஷ்ணம்
 பேசும் பெருமான் கோவில்

சேத்தியாத்தோப்பு : தினமலர் செய்தி எதிரொலியால் பாழடைந்த வானமாதேவி பேசும் பெருமான் கோவிலை சுத்தப்படுத்தும் பணியை அறநிலைய அதிகாரிகள் துவக்கினர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த வானமாதேவியில் சோழர்காலத்தில் கட்டிய பேசும் பெருமான் கோவில் சிதிலமடைந்து, கோவில் நிலங்கள் தனிநபர்கள் பிடியில் இருப்பது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவில் செயல் அலுவலர் அய்யப்பன் கோவிலில் நேரடி ஆய்வு செய்தார்.

பின், கோவிலின் வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியை செயல் அலுவலர் அய்யப்பன் நேற்று துவக்கி வைத்தார். ஊராட்சித் தலைவர் பாலகஸ்துாரி, ஒன்றிய கவுன்சிலர் பாலகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சித் தலைவர் முருகேசன், ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஜே.சி.பி., இயந்திரம் மூலம் புதர்மண்டி கிடந்த கோவில் வளாகத்தை சுத்தப்படுத்தினர். கோவில் கருவறை முழுவதும் சுத்தம் செய்து பேசும்பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம் செய்து தீபாராதனை நடந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு கோவில் சுத்தப்படுத்துவதை பார்த்த வானமாதேவி கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X