மருத்துவ மாணவி தற்கொலை

Added : ஆக 30, 2021
Share
Advertisement
புதுச்சேரி : தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மருத்துவ கல்லுாரி மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.மதுரை, ரயிலார் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பாஸ்கர் மகள் செந்துார்இளவரசி இளந்தளிர்,20.இவர், புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் செமஸ்டர் தேர்வில் இரண்டு

புதுச்சேரி : தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மருத்துவ கல்லுாரி மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை, ரயிலார் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பாஸ்கர் மகள் செந்துார்இளவரசி இளந்தளிர்,20.இவர், புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் செமஸ்டர் தேர்வில் இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்தார்.இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், 27ம் தேதி இரவு 11.௦௦ மணியளவில் கல்லுாரி விடுதியில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

இதையறிந்த விடுதி வார்டன்கள் மாணவியை மீட்டு, அதே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், 28ம் தேதி மதியம் 2.௦௦ மணியளவில் உயிரிழந்தார். இது குறித்து மாணவியின் தந்தை பாஸ்கர் கொடுத்த புகாரின்பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X