கிரைம் செய்திகள்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
பெண் தற்கொலைபண்ருட்டி: பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் ஓடை தெருவை சேர்ந்த கோதண்டபாணி மனைவி ரஞ்சிதா,28; இரு குழந்தைகள் உள்ளனர். கணவர் அடிக்கடி குடித்து விட்டு வருவதால் தகராறு ஏற்படும். நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டதால் நேற்று அதிகாலை 2:00 மணியளவில் ரஞ்சிதா வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ரஞ்சிதாவின் தந்தை தர்மலிங்கம்,57; கொடுத்த

பெண் தற்கொலை

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் ஓடை தெருவை சேர்ந்த கோதண்டபாணி மனைவி ரஞ்சிதா,28; இரு குழந்தைகள் உள்ளனர். கணவர் அடிக்கடி குடித்து விட்டு வருவதால் தகராறு ஏற்படும். நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டதால் நேற்று அதிகாலை 2:00 மணியளவில் ரஞ்சிதா வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ரஞ்சிதாவின் தந்தை தர்மலிங்கம்,57; கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.சூதாடிய 3 பேர் மீது வழக்கு

புவனகிரி: புவனகிரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மற்றும் போலீசார் நேற்று முன் தினம் ரோந்து சென்றனர். தம்பிக்குநல்லான்பட்டினம் ஐயனார் கோவில் அருகில் பணம் வைத்து சூதாடிய புவனகிரி சவுடாம்பிகை தெரு பழனிவேல்,60; ராமச்சந்திரன்,61; ஈஸ்வரன்கோவில்தெரு ஜெயபால்,70; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து ரூ.150, புள்ளித் தாள்களை பறிமுதல் செய்தனர்.வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கொக்குப்பாளையம் குமரன் நகரை சேர்ந்தவர் வரதராஜன்,48; பால் வியாபாரி; இவர் தனது மனைவியுடன் தினமும் மாலை பால் வியாபாரத்திற்கு வெளியே செல்வது வழக்கம். நேற்று முன் தினம் மாலை வெளியே சென்று விட்டு இரவு 9:00 மணிக்கு வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 3 சவரன் தங்க நகை, வெள்ளி 2 கிலோ மற்றும் ரூ. 10 ஆயிரம் திருடு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ. ஒரு லட்சம் ஆகும். வரதராஜன் கொடுத்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிந்து கொள்ளையடித்தவர்களை தேடி வருகிறார். மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ஆதி தலைமையிலான போலீசார் நேற்று பரவளூர், கோமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பரவளூர் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார், 51; கோமங்கலம் அமுதா, 55; தங்கமணி, 62; ஆகியோர் டாஸ்மாக் மதுபாட்டில் விற்றது தெரிந்தது. விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து 11 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.திருமணம் நிச்சயித்த பெண் மாயம்

கடலுார்: கடலுார், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாபு மகள் ஜனனி, 23; இவருக்கும், விழுப்புரம், குடுமியாங்குப்பத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 27ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை ஜனனியின் பெற்றோர் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்றனர். மாலை மீண்டும் வீடு திரும்பிய போது, ஜனனியை காணவில்லை. கடலுாரில் தனியார் கல்லுாரியில் ஜனனி படித்த போது, உச்சிமேடு காலனியைச் சேர்ந்த 23 வயது வாலிபரிடம் பழகினார். அவர் மீது சந்தேகம் உள்ளதாக கடலுார், புதுநகர் போலீஸ் நிலையத்தில் பாபு புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து ஜனனியை தேடி வருகின்றனர்.மாணவியை கடத்தியவருக்கு வலை

கடலுார்: புதுக்கோட்டை மாவட்டம், வீரப்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் புகழேந்தி, 25; இவர், கடலுாரில் அக்கா வீட்டிற்கு வந்து சென்ற போது, 17 வயது பிளஸ் 2 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 26ம் தேதி மாணவியை திடீரென காணவில்லை. தனது மகளை புகழேந்தி கடத்திச் சென்றதாக மாணவியின் தந்தை நேற்று அளித்த புகாரின் பேரில் கடலுார், துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து புகழேந்தியையும், மாயமான மாணவியையும் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X