பொது செய்தி

இந்தியா

வீடுகளில் மழைநீரை சேமிக்க ஜான்குமார் வலியுறுத்தல்

Added : ஆக 30, 2021
Share
Advertisement
புதுச்சேரி : எல்லோரது வீடுகளிலும் மழை நீரை சேகரித்து பயன் படுத்த வேண்டும் என, ஜான்குமார் எம்.எல்.ஏ., பேசினார்.சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து, பா.ஜ., எம்.எல்.ஏ., ஜான்குமார் பேசியதாவது:புதுச்சேரியின் தண்ணீ ருக்காக இங்கு வந்து குடியேறியவர்கள் அதிக மாகும். ஆனால் அந்த தண்ணீர் தற்போது சிறப்பானதாக இல்லை.முத்திரையர்பாளையத் தில் இருந்து வரும் தண்ணீர் மட்டும்

புதுச்சேரி : எல்லோரது வீடுகளிலும் மழை நீரை சேகரித்து பயன் படுத்த வேண்டும் என, ஜான்குமார் எம்.எல்.ஏ., பேசினார்.சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து, பா.ஜ., எம்.எல்.ஏ., ஜான்குமார் பேசியதாவது:

புதுச்சேரியின் தண்ணீ ருக்காக இங்கு வந்து குடியேறியவர்கள் அதிக மாகும். ஆனால் அந்த தண்ணீர் தற்போது சிறப்பானதாக இல்லை.முத்திரையர்பாளையத் தில் இருந்து வரும் தண்ணீர் மட்டும் நன்றாக சுவையாக இருக்கிறது. புதுச்சேரியில் மழை நீரை சேமிப்பது இல்லை.பெரும்பாலும் கடலில் கலக்கிறது.

நான் தண்ணீர் வரி செலுத்துவது இல்லை. எனது வீட்டில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்து சேமித்து, அந்த தண்ணீரை பயன்படுத்துகிறேன்.முன்பு, எல்லா வீட்டிலும் கிணறு இருக்கும். அந்த தண்ணீரை தான் பயன்படுத்துவார்கள். தற்போது அந்த கிணறுகளை மூடிவிட்டனர். எல்லோர் வீட்டிலும் மழை நீரை சேகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X